முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எ.ல்ஏ-க்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் 3 முறை கோவில்பட்டிதொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் அ.தி.மு.கவில் இருந்து விலகி தன்னை த.வெ.கவில் இணைத்துக் கொண்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் “யாரும் த.வெ.க-வில் இணைய வேண்டாம். சீனியர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. முதல்வர் விஜய்யை கூட சந்திக்க முடியவில்லை” என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், இதனை கடம்பூர் ராஜூ மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் தெய்வீக ஆசியுடன் கடந்த ஜூன் 6-ம் தேதி, சாதி, மத பணக்கலாச்சாரம் ஆகியற்றை முற்றிலும் ஒழித்து புதிய யுகம் படைத்திட்ட மக்களின் முதல்வர் விஜய்யின் தலைமையில் புதிய பாதை, புதிய பயணம் என்கின்ற வகையில் புதிய பயணத்தை தொடங்கினோம். தமிழக அரசியலில் இனி என்றும் வெற்றிக்கொடி நாட்டுகின்ற ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம்தான்.