“I screamed in pain”: The ordeal faced in a park by a woman who had gone to a temple with a friend on her birthday.-வலியால் கதறினேன்: பிறந்த நாளில் நண்பருடன் கோயிலுக்கு சென்ற பெண்ணுக்கு பூங்காவில் நடந்த கொடுமை

Spread the love

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்காஜி மந்திருக்கு 17 வயது மைனர் பெண் சென்று சாமிகும்பிட்டுவிட்டு தனது ஆண் நண்பருடன் அருகில் இருந்த பூங்காவில் இருந்தார். அந்நேரம் அங்கு வந்த 3 பேர் தங்களை போலீஸார் எனக்கூறி துப்பாக்கி முனையில் மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள மைனர் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். முதல் தகவல் அறிக்கையில், `எனது பிறந்தநாளன்று கல்காஜி கோயிலுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தேன். எனவே என்னுடன் வருமாறு கூறி ஒரு ஆண் நண்பரை அழைத்து சென்றேன். நாங்கள் மாலை சுமார் 5 மணிக்கு வீட்டை விட்டுப் புறப்பட்டு, 5:45 மணியளவில் கோயிலை அடைந்தோம்.

போலீஸ் என கூறி வந்த மர்ம நபர்கள்

அங்கு மாலை சுமார் 7 மணி வரை நாங்கள் இருந்தோம். இருவரும் பின்னர் 7-வது நுழைவாயில் வழியாக அருகில் இருந்த ஆஸ்தா குஞ்ச் பூங்காவிற்குள் சென்றோம். இஸ்கான் கோயிலுக்கும் செல்ல முடிவு செய்து சிறிது நேரம் பூங்காவில் அமர்ந்து சிப்ஸ் சாப்பிட்டுவிட்டுப் பிறகு கோயிலுக்குச் செல்லலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம். பூங்காவில் இருந்த போது 30 முதல் 35 வயதுக்குட்பட்ட மூன்று பேர் எங்களை அணுகினர். அந்த நபர்கள் எனது நண்பரைப் பிடித்துக் கன்னத்தில் அறைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் வந்த இரு சக்கர வாகனம்

பாதிக்கப்பட்டவர்கள் வந்த இரு சக்கர வாகனம்

அவர்கள் யார் என்று கேட்டபோது, ​​தாங்கள் போலீஸார் என்று கூறிய அந்த நபர்கள், பூங்காவிற்குள் நுழைய அனுமதி இல்லை என்று கூறி, அங்கு அவர்கள் ஏன் இருக்கிறார்கள் என்பது குறித்துக் கேள்வி எழுப்பினர். மூன்று பேரில் ஒருவர் தனது தோழனை அழைத்துச் சென்றார். மற்றவர்கள் எங்கள் அலைபேசிகளைப் பறித்துக்கொண்டனர். பின்னர், அவர்கள் என்னிடம் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தைச் சுட்டிக்காட்டி, அங்கு செல்லுமாறு தன்னிடம் கூறினர். ஆனால் எதுவும் கேட்பதாக இருந்தால் இங்கேயே கேட்கும்படி கூறினேன்.

வலியால் கதறினேன், ஆனால் விடவில்லை

அப்போதுதான் ஒருவர் மற்றொரு நபரை ஆசிஃப் என்று அழைத்து, அவரிடம் துப்பாக்கியை எடுக்குமாறு கூறினார். கருப்பு நிற கைத்துப்பாக்கி போன்ற ஒன்றைக் காட்டிய அந்த நபர், பின்னர் அதைத் தனது பையில் மீண்டும் வைத்துக்கொண்டார். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி என்னை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு கத்தியை காட்டி மிரட்டி கூச்சலிக்கூடாது என்று கூறி ஒருவர் பின் ஒருவராக மூவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். பாலியல் வன்கொடுமையின் போது கடும் வலியில் அழுதுகொண்டிருந்தேன் ஆனால் அவர்கள் தங்களது செயலை அதை நிறுத்தவில்லை.

சம்பவத்திற்குப் பிறகு, அவர்கள் விரைவாக உடையை அணியுமாறு கூறினர். பின்னர் எனது நண்பரை மீண்டும் அழைத்து வந்தனர். எங்கள் இருவரின் அலைபேசிகளையும் திருப்பித் தந்து, உடனடியாக பூங்காவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். அதோடு இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி அனுப்பி வைத்தனர். இறுதியில் நாங்கள் இருவரும் பூங்காவிலிருந்து வெளியில் வந்தோம். பின்னர் எனது நண்பரிடம் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்துத் தெரிவித்தேன். அதைத் தொடர்ந்து அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *