IND vs WI: “வெஸ்ட் இண்டீஸை சாதாரணமா நினைக்கக் கூடாது, ஏன்னா.!” – ஸ்ரேயாஸ் ஐயர் கூறியதென்ன? | shreyas iyer about west indies team

Spread the love

தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்தபோதும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிடவில்லை என்றார். மிடில் ஆர்டரில் இந்திய அணி ஆட்டத்தைச் சீராக்கியதுடன், கடைசி நேரத்தில் பிரின்ஸ் யாதவ் எடுத்த ரன்களும் 223 ரன்கள் என்ற மொத்த ஸ்கோரை எட்ட உதவியதாகத் தெரிவித்தார்.

மேலும் ஹைதராபாத், பெங்களூரு போன்ற மைதானங்களிலும் அதிக ரன்கள் குவிக்கப்படலாம் என்பதை ஒப்புக்கொண்ட ஸ்ரேயாஸ், தங்களுடைய வழக்கமான திட்டங்களையும் செயல்முறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றார்.

ஸ்ரேயாஸ் ஐயர்

ஸ்ரேயாஸ் ஐயர்

அதேநேரத்தில், தாக்குதல் அணுகுமுறையும் மனநிலையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும்,வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வீரர்கள் இருப்பதால், அந்த அணியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

போட்டி முழுவதும் நேர்மறையான மனநிலையுடன் விளையாடுவதுடன், எந்தக் கட்டத்திலும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் ஸ்ரேயாஸ் ஐயர் வலியுறுத்தினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *