Jailer 2: "இன்னைக்கு என்னென்னைக்கும் ஒரு தலைவன்தான்!" – 'ஜெயிலர் 2' டிரெய்லர் ஹைலைட்ஸ்

Spread the love

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகியிருந்தது.

அப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவானது ‘ஜெயிலர் 2’. அக்டோபர் 15-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Jailer 2 Trailer
Jailer 2 Trailer

ரஜினிகாந்த் – நெல்சன் – அனிருத் என முதல் பாகத்தின் கூட்டணி இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறது. அதோடு, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலரும் புதிய கதாபாத்திரங்களில் இந்த ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்திருக்கிறார்கள். இதன் டிரெய்லரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும், வர்மன் (விநாயகன்) கதாபாத்திரம் இறந்த பிறகு நடக்கும் கதையாகவும் இதனை அமைத்திருக்கிறார்கள் என்பதை டிரெய்லரில் காட்டியிருக்கிறார்கள்.

அத்துடன் சில ஃப்ளாஷ்பேக் காட்சிகளையும் படத்தில் இணைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Jailer 2 Trailer
Jailer 2 Trailer

‘ஜெயிலர்’ முதல் பாகத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரஃப் ஆகியோரின் கதாபாத்திரங்கள் கவனம் பெற்றன.

இவர்கள் இரண்டாம் பாகத்திலும் வருகிறார்கள் என்பதை டிரெய்லரில் சொல்லியிருக்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *