Jailer 2: "மோகன்லால் சாரின் காட்சிகளை சுருக்குவது தேவையற்றது!" – மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

Spread the love

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட சிலர் கேமியோ ரோலில் வருகிறார்கள்.

Jailer 2
Jailer 2

‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லாலின் காட்சிகள் சிலவற்றை நீக்கியிருப்பதாக மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் ஷாம்சுதீன் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து என் வேலையின் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. டிரெய்லரிலேயே மோகன்லால் சார் 2 வினாடிகள் மட்டுமே காட்சியளிக்கப்பட்டார் என்றாலும் நான் கவலைப்படவில்லை.

ஆனால், படம் வெளியான பிறகுதான் மோகன்லால் சாருக்காக நான் சிறப்பாக ஆடை வடிவமைத்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமன்றி, டிரெய்லரில் வந்த அந்த ஒரு காட்சியும் படத்தில் ட்ரிம் செய்யப்பட்டுச் சுருக்கப்பட்டுவிட்டது.

சினிமாவில் என்னுடைய அனுபவத்தில் சொல்கிறேன், மோகன்லால் சார் போன்ற ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டாரின் காட்சிகளை இப்படி வெட்டிச் சுருக்குவது முற்றிலும் தேவையற்ற ஒன்று.

நமது சூப்பர் ஸ்டார் திரையில் இப்படிச் சுருக்கப்பட்டுவிட்டதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒருவேளை ‘ஜெயிலர்’ படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்பட்டால், அதில் நான் நிச்சயமாகப் பங்கெடுக்க மாட்டேன்.

என் வேலையை நம்பிய அனைவருக்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் எந்த லாபத்திற்காகவோ, கோடிகளுக்காகவோ, பிராண்டுகளுக்காகவோ அல்லது ஸ்டார்டமிற்காகவோ நிற்கவில்லை.

நான் மோகன்லால் சாருக்காகவும், அவருடைய ரசிகர்களுக்காகவும், சினிமா கலைக்காகவும் மட்டுமே நிற்கிறேன்.” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *