Jan Aushadhi: ₹46-ல் முகப்பரு ஃபேஸ் வாஷ்; ஜன் அவுஷதி அறிமுகப்படுத்திய புதிய தயாரிப்பு | Jan Aushadhi Launches Affordable Salicylic Acid Face Wash

Spread the love

மாறி வரும் உலகில் எப்போதுமே அனைவரும் மிக முக்கியத்துவம் தரும் ஒன்று – “ஆரோக்கியமான முகப் பராமரிப்பு’.

ஆனால், சந்தையில் விற்கும் பெரும்பாலான பராமரிப்புப் பொருள்களின் விலை அதிகமாக இருப்பதால் சாமானிய மக்களால் அந்தப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த முடிவதில்லை.

இந்த நேரத்தில் இந்தியாவின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் பெரும்பாலான மக்களின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதான் மந்திரி பாரதிய ஜன்ஒளஷதி பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் மத்திய அரசு சாலிசிலிக் அமிலம் ஃபேஸ் வாஷ் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

தயாரிப்பு விவரங்கள் மற்றும் விலை

– 1% சாலிசிலிக் அமிலம் ₹ 46.88. இது மேலோட்டமான முகப் பிரச்னைகளை அதாவது முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைத் தீர்க்கும் எனவும்,

– 2% சாலி சிலிக் அமிலம் ₹65.63. இது சருமத்தில் ஆழமாகச் சென்று முகத்தில் இருக்கும் பிரச்னைகளை அதாவது முகப்பருக்கள் போன்றவற்றை தீர்க்கும் எனவும் உறுதியளித்துள்ளனர்.

1% சாலிசிலிக் அமிலம் - 2% சாலி சிலிக் அமிலம்

1% சாலிசிலிக் அமிலம் – 2% சாலி சிலிக் அமிலம்

மேலும் இதில் இருக்கும்

– பீட்டா-ஹைட்ராக்ஸி அமிலம் (BHA): சாலிசிலிக் அமிலம் என்பது எண்ணெய்யில் கரையக்கூடிய ஒரு BHA ஆகும். இது தோலின் மேல்பகுதியோடு நிற்காமல், எண்ணெய் சுரப்பிகள் மற்றும் துளைகளின் ஆழம் வரை ஊடுருவுகிறது.

– ஆழமான சுத்தம் (Deep Cleansing): முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை உருவாக்கும் இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான செபம் (Sebum) எனப்படும் முக எண்ணெய்யைக் கரைத்து வெளியேற்றுகிறது.

– பருக்கள் வராமல் தடுத்தல்: தோலின் துளைகளைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம், முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் வளர்வதைத் தடுக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *