Janani Ashokkumar: “நான் எப்போதும் அரசியல் சார்பற்றவளாகவே இருந்து வருகிறேன்!” – ஜனனி அசோக்குமார் |actress-janani-ashok-kumar-clarification-on-false-634-crore-scam-allegations

Spread the love

ரூ.634 கோடி பணியிட நியமன ஊழல் புகாரில் சின்னத்திரை நடிகை ஜனனி அசோக்குமாரின் பெயரும் சம்பந்தப்படுத்தப்பட்டு சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டது.

தற்போது இதற்கு விளக்கமளித்து நடிகை ஜனனி அசோக்குமார் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஜனனி அசோக்குமார்

ஜனனி அசோக்குமார்

அந்த அறிக்கையில், “கடந்த இரண்டு நாட்களாக எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் எனது பெயரை, ரூ.634 கோடி முறைகேடு புகாருடன் தொடர்புபடுத்தி பரப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் மற்றும் கதைகளுக்குப் பதிலளிப்பது முக்கியம் என நான் கருதுகிறேன்.

நான் ஒன்றை மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த விவகாரத்திற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நான் எப்போதும் அரசியல் சார்பற்றவளாகவே இருந்து வருகிறேன்.

நான் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் இணைந்ததில்லை, அதேபோல அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்பையும் பேணியதில்லை. என்னைப்பற்றிப் பரப்பப்படும் விஷயங்கள் அனைத்தும் முற்றிலும் உண்மையற்றவை. நான் ஒன்று கேட்க விரும்புகிறேன்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *