JIO: திருபாய் அம்பானி பற்றிய பேசிய அனந்த்; கண்கலங்கிய முகேஷ் அம்பானி| Mukesh Ambani in tears as Anant Ambani shares Dhirubhai

Spread the love

பங்குசந்தையில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குகள் இன்று காலை பட்டியலிடப்பட்டிருக்கின்றன. ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையில் அவரின் மகன் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி இதனைத் தொடங்கி வைத்திருக்கின்றனர்.

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ பிளாட்ஃபார்ம் நிறுவனம் முதல் முறையாக பொது பங்குகளை வெளியிட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அனந்த் அம்பானி, “சோர்வாடில் ஒரு சிறிய வீட்டில்தான் இந்தக் கனவு உருவானது. ஏடனில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் இளம் வயதில் வேலை செய்த திருபாய் அம்பானி (அனந்த் அம்பானியின் தாத்தா) அவர்களுக்கு பணமோ அல்லது பெரிய தொடர்புகளோ எதுவும் இல்லை.

 அனந்த் அம்பானி

அனந்த் அம்பானி

இருப்பினும், அவரது பயணம் உண்மையான லட்சியத்தை நமக்கு உணர்த்துகிறது. இந்தியராலும் தன் வறுமை மற்றும் சூழ்நிலைகளைக் கடந்து, ஓர் அசாதாரணமான மாபெரும் கனவைக் காண முடியும் என்பதை அவர் உலகிற்கு நிருபித்துக் காட்டினார்.

அடுத்து, இந்தியாவைப் பற்றிய எனது தந்தையின் கனவைப் பற்றிப் பேச விரும்புகிறேன். உலக நாடுகளுக்கு மத்தியில் நமது இந்தியா எந்தவொரு துறையிலும் பின்தங்கிவிடக் கூடாது என்பதில் முகேஷ் அம்பானி அவர்கள் உறுதியாக இருந்தார். ஜாம்நகரின் தரிசு நிலம், உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக உருவெடுத்தது. இது, இந்தியர்களின் உழைப்பும் முயற்சியும் உலக அரங்கின் கவனத்தையே ஈர்க்கும் வல்லமை கொண்டது என்பதை உலகுக்கு உணர்த்தியது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *