JioHotstar: `பிக்பாஸ் முதல் ஹார்ட் பீட் வரை’ – பிற நாடுகளுக்கும் விரிவடையும் `ஜியோ ஹாட்ஸ்டார்’! | JioHotstar has expanded its OTT service to Canada, the UK, and Singapore.

Spread the love

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) கனடா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் தன் ஓடிடி நிறுவனத்தை விரிவுபடுத்தியிருக்கிறது. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகள் தற்போது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு அம்சத்தை தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களும் பார்க்கவிருக்கும் முதல் 10 நிகழ்ச்சிகளின் பட்டியல்:

1. பிக் பாஸ் (Bigg Boss)இந்தியாவின் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோ பிரான்சைஸ், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பங்களா ஆகிய ஆறு மொழிகளில் களமிறங்குகிறது. முதன்முறையாக, கனடா மற்றும் இங்கிலாந்தில் உள்ளவர்கள் இதில் நேரலை வாக்களிப்பு செய்ய முடியும். மேலும், கனடாவில் இந்தி பிக் பாஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதற்கு 7 நாட்களுக்கு முன்பே பார்க்க முடியும். கனடா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் 24/7 நேரலை ஒளிபரப்பும் வழங்கப்படுவதால், முதன்மை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

2. அழகே அழகு: தன் சொந்தக் கனவுகளுக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே போராடும் ஒரு தைரியமான பெண்ணை மையமாகக் கொண்ட ஒரு தமிழ் குடும்பத் தொடர்.
3. ஹார்ட் பீட்: பரபரப்பான மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் தர்மசங்கடங்களை மையமாகக் கொண்ட ஒரு மருத்துவத் தொடர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *