John Doe Review: க்ரைம் த்ரில்லர் டெம்ப்ளேட்டில் சில சர்ப்ரைஸ்கள்! ரசிக்க வைக்கிறானா இந்த `ஜான் டோ’? | arjun das sanchana natarajan starring madhumita directorial john doe movie review tamil

Spread the love

கொஞ்சம் தடுமாற்றத்துடன் த்ரில்லர் உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் இப்படம், இடைவேளைக் காட்சியில் வரும் அந்த எதிர்பாராத ட்விஸ்ட் மூலம் கொஞ்சம் நிமிர்கிறது. முதல் பாதியில் திரட்டிய தகவல்கள் மூலம் இரண்டாம் பாதியில் வெவ்வேறு புள்ளிகளை இணைக்கும் காட்சிகளும் சுவாரசிய கோப்பு! இதன் பிறகு, ஹீரோ – வில்லன் கண்ணாமூச்சி ஆட்டம், வில்லனைக் கண்டுபிடிக்க ஹீரோ மேற்கொள்ளும் விஷயங்கள் போன்ற எபிசோடுகளில் பெரிய சர்ப்ரைஸ்கள் இல்லை. இறுதியில், விவரிக்கப்படும் வில்லனின் கதை மட்டும் புதுசு! ஆனால், லாஜிக்?!

முந்தைய காட்சிகளில் வில்லனைப் பற்றிய சிறு சிறு விவரிப்புகளைத் துருத்தலில்லாமல் நம் கவனத்தில் ஏற்றியதும், க்ளைமாக்ஸில் அதன் முழுமையான விளக்கத்தைச் சொல்லி இணைத்ததும் நல்லதொரு யுக்தி. ஆனால், திரைக்கதையில் ஆங்காங்கே காலக்கோடு குழப்பங்கள் வருவதைக் கவனித்து அதை இன்னுமே தெளிவுபடுத்தியிருக்கலாம்.

John Doe Review | ஜான் டோ விமர்சனம்

John Doe Review | ஜான் டோ விமர்சனம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *