Kallakurichi TVK MLA: விசாரணை அதிகாரியாக திருப்பூர் எஸ்பி; யார் இந்த சிருஷ்டி சிங் IPS? | kallakurichi tvk mla case investigation officer tiruppur sp shrushti singh

Spread the love

தமிழ்நாட்டில் களமிறங்கிய ஸ்ருஷ்டி சிங், தனது துடிப்பான செயல்பாடுகளால் மிகக் குறுகிய காலத்திலேயே முக்கியப் பதவிகளைப் பெற்றிருக்கிறார். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்-டிவிஷனில் உதவி காவல் கண்காணிப்பாளராகத் தனது களப்பணியைத் தொடங்கிய இவர், அங்கு சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், குற்றச் செயல்களை ஒடுக்குவதிலும் சிறப்பாகச் செயல்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநகர தெற்கு பகுதி காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 2026 ஜூன் மாதம் தமிழக அரசு மேற்கொண்ட அதிரடி ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றத்தின்போது, திருப்பூர் மாவட்டத்தின் 14-வது காவல் கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூரை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்றும் நோக்கில், சமீபத்தில் ஒரே நாளில் 92 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி, போதைப்பொருள் வழக்குகளில் தொடர்புடைய பலரைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். காங்கேயம் போன்ற மாவட்டத்தின் முக்கியப் பகுதிகளில் காவலர்களுடன் இணைந்து நேரடியாக நடை ரோந்து மேற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறார்.

சிருஷ்டி சிங் ஐபிஎஸ்

சிருஷ்டி சிங் ஐபிஎஸ்

தற்போது கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ சி. அருள் விக்னேஷ் மீதான புகாரை விசாரிக்கும் மிக உயரிய பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை எவ்வித பாரபட்சமுமின்றி, நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய, காவல்துறைத் தலைவர் காமினி ஐபிஎஸ் இந்த விசாரணையை முழுமையாகக் கண்காணிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளம் மற்றும் நேர்மையான பெண் ஐபிஎஸ் அதிகாரி ஸ்ருஷ்டி சிங் நியாயமான விசாரணையின் மூலம் நீதி பெற்றுத் தருவார் என்கிற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *