ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகயிருக்கும் படம் “கருப்பு’.
ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் நாளை (மே 14) ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான புரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய சூர்யா, ” நான் எப்போதும் ஆர்.ஜே. பாலாஜியை ‘இயக்குநர்’ என்றுதான் அழைப்பேன். அவருடைய பயணத்தின் மீது எனக்குப் பெரும் மரியாதை உண்டு.

இந்த ஒரு வாழ்க்கையில், ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்தி, அதில் நிபுணத்துவம் பெறவே என்னால் முடியும் என்று நான் எப்போதும் நம்புபவன்.
ஆனால் அவரோ பல திறமைகளைக் கொண்டவர். ஆர்.ஜே, வர்ணனையாளர், நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குநர் எனப் பன்முகம் கொண்டவர். அதுமட்டுமின்றி அவர் ஒரு சிறந்த நண்பர் மற்றும் தந்தை. அவருடன் செலவிட்ட நேரத்தை நான் மிகவும் ரசித்தேன்.