KBC 18: மும்பைக்கு அமிதாப் பச்சனை பார்க்க வந்ததாக கூறிய அஜ்மல் கசாப்? – வழக்கறிஞர் சொன்ன தகவல்!

Spread the love

பாகிஸ்தான் தீவிரவாதிகள் 2008ம் ஆண்டு கடல் மார்க்கமாக மும்பைக்குள் நுழைந்து இரண்டு நாட்கள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் அஜ்மல் கசாப் என்பவன் மட்டும் பிடிபட்டான். அவன் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உஜ்வல் நிகம் ஆஜரானார். அவர் நடிகர் அமிதாப் பச்சன் நடத்தும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அமிதாப் பச்சன் அவருடன் உரையாடினார். நிகழ்ச்சியில் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நிகாமுடன் கலந்து கொண்டனர்.

மும்பை தாக்குதல் வழக்கைப் பற்றி விவாதிக்கும் போது, ​​கசாப் தூக்கிலிடப்படுவதற்கு கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆனது ஏன் என்று அமிதாப் பச்சன் உஜ்வல் நிக்கமிடம் கேட்டார்.

உஜ்வல் நிகம்

உஜ்வல் நிகம்

அதற்கு பதிலளித்த உஜ்வல் நிகம், அஜ்மல் கசாப்பை கோர்ட்டிற்கு கொண்டு வந்தபோது அவன் என்னை பார்த்துக்கொண்டிருந்தான். நானும் அவனையே பார்த்தேன்”‘ என்றார்.

அவனை சுட்டு கொன்று இருப்பேன்

இந்த வழக்கின் போது கசாப் தனது கைது மற்றும் அடையாளம் குறித்து கூறிய பல தகவல்களை உஜ்வல் நிகம் நினைவு கூர்ந்தார். அவர் இது குறித்து மேலும் கூறுகையில், “கசாப் ஆரம்பத்தில் 26/11 தாக்குதல்கள் தொடர்பாக கைது செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக நவம்பர் 6 ஆம் தேதி ஜூகு கடற்கரையில் கைது செய்யப்பட்டதாகக் கூறினான். அதோடு அமிதாப் பச்சனை பார்க்க மும்பை வந்ததாக அஜ்மல் என்னிடம் கூறினான்” என்றார். அதற்கு அமிதாப் பச்சன், “இல்லை, அவன் அப்படி வந்திருந்தால் எனது வீட்டிற்குள் விட்டு இருக்கமாட்டேன், அவனை சுட்டுக் கொன்று இருப்பேன்” என்று தெரிவித்தார்.

விசாரணையில் கசாப் கூறியதாக கூறப்படும் மற்ற கூற்றுகளையும் உஜ்வல் நிகம் நினைவு கூர்ந்தார். அவரது கூற்றுப்படி, கசாப் தான் மைனர் என்று கூறினான். அதோடு தன்னை ரா உளவு அமைப்பு கைது செய்ததாக தெரிவித்தான். அவனது வயதைப் பற்றிய அவனது வாக்குமூலம் வழக்கில் மற்றொரு சட்டப் பிரச்னையாக மாறியது என்றும் தெரிவித்தார். இந்த உரையாடல் உஜ்வல் நிகம் மற்றும் 26/11 விசாரணையை மையமாகக் கொண்ட கோன்பனேகா குரோர்பதியின் சிறப்பு அத்தியாயத்தின் ஒரு பகுதியாகும். உஜ்வல் நிகம் இவ்வழக்கில் ஆஜரானது குறித்து ‘தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் உஜ்வல் நிகம்’ என்ற பெயரில் படம் தயாரிக்கப்படுகிறது. இப்படத்தில் ராஜ்குமார் ராவ் உஜ்வல் நிகமாக நடிக்கிறார், இப்படத்தில் வாமிகா கபியும் நடிக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *