Keerthy Suresh: “ஒருபோதும் நமது கலாசாரத்தைத் தாழ்த்திப் பேச மாட்டேன்” – நடிகை கீர்த்தி சுரேஷ் | “I will never speak disparagingly about our culture” – Actress Keerthy Suresh

Spread the love

அப்போது அருகிலிருந்த கீர்த்தி சுரேஷ் சிரித்துக்கொண்டே, “தமிழ் மற்றும் தெலுங்குக் கலாசாரத்தில் மாமாவைத் திருமணம் செய்துகொள்வது மிகவும் சகஜமான ஒன்று” என்று கூறியது ரசிகர்களிடையே விவாதமானது. சிலர் கதையையும் கதாநாயகனையும் தெரிந்துகொண்டுதானே ஒப்பந்தமானார், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் இதை விமர்சிக்கிறார் என்ற கேள்விகளும் எழுப்பினர்.

இந்த நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சத்யவான் சாவித்திரி’ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டுவருகிறார். அதன் ஒருபகுதியான நிகழ்ச்சியில் இந்தச் சர்ச்சை குறித்து கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

அதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், “ராதிகா அந்தக் கருத்தைச் சொன்னபோது, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர் என்ன பேசுகிறார் என்பதே எனக்கு முதலில் புரியவில்லை. ‘என் மாமாவுடன் நான் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது’ என்று அவர் கூறினார். சற்று நேரத்திற்குப் பிறகே அவர் நம் கலாசாரத்தைப் பற்றிப் பேசுகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். தென்னிந்தியக் கலாசாரத்தைப் பற்றி அவருக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்தவுடன், அது இங்குள்ள ஒரு பாரம்பர்ய வழக்கம் என்பதை அவருக்கு விளக்க முயற்சித்தேன். கேரளாவில் அந்தக் கலாசாரம் கிடையாது என்பதால், இங்குள்ள கலாசாரத்தைக் குறிப்பிட்டே அவ்வாறு பேசினேன். மிகுந்த மரியாதையுடன் சொல்கிறேன், நான் ஒருபோதும் நமது கலாசாரத்தைத் தாழ்த்திப் பேச மாட்டேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *