Kim Jong un: எனக்கா எண்ட் கார்டு போடுறீங்க.. சீனாவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த கிம் ஜங் உன்! பின்னணி | Kim Jong un North Korea leader Makes Surprise China Visit Through Newly Opened Bridge Amid Health Rumours

Spread the love

International

oi-Mani Singh S

பீஜிங்: இரு நாட்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், வடகொரியாவில் அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார் என்ற போட்டி நிலவுவதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அது உண்மையல்ல என்று தெரியவந்தது. எனினும் அவர் பொதுவெளியில் வராத நிலையில் அதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று அவர் சீனா வருகை தந்துள்ளார்.

கிம் ஜாங் உன் உடல் நிலை பற்றி பல்வேறு யூக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். இந்த பயணத்தின் போது சீன நாட்டின் உயர் அதிகாரிகளையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேசினார்.

Kim Jong un North Korea leader Makes Surprise China Visit Through Newly Opened Bridge Amid Health Rumours

கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாக..

வடகொரியா நாட்டின் அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். உலகின் மர்ம தேசமாக உள்ள அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றே வெளியுலகத்திற்கு தெரியாது. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வடகொரியாவின் அதிபராக இருக்கக் கூடிய கிம் ஜாங் உன் பற்றி பல்வேறு பரபரப்பு தகவல்கள் அவ்வப்போது எழுவதும் பின்னர் அது வதந்தி என்று மறுக்கபப்டுவதும் தொடர் கதையாகி வருகிறது.

அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மூளை சாவு அடைந்துவிட்டதாகவும், வடகொரியாவில் அடுத்து ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற போட்டி நிலவுவதாகவும் பரபரப்பாக செய்திகள் வெளிவந்தன. எனினும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் புகைப்படத்தை வெளியிட்டு இந்த சர்ச்சைகளுக்கு வடகொரியா முற்றுப்புள்ளி வைத்தது.

சீனா – வட கொரியா வர்த்தகம்

கிம் ஜாங் உன் உடல் நிலை பற்றி பல்வேறு யூக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சீனாவுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். சீனாவின் எல்லையோர நகரமான தாண்டோங் நகருக்கு கிம் ஜாங் உன் வருகை தந்துள்ளார். வடகொரியாவையும் சீனாவையும் இணைக்கும் ஆற்றுப்பாலம் ஒன்று கடந்த 15 ஆம் தேதி திறக்கப்பட்டது.

கட்டி முடிக்கபட்டு 12 ஆண்டுகள் திறக்கப்படாமல் இருந்த பாலம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. யாலு ஆற்றில் கட்டப்பட்ட இந்த பாலம் வடகொரியாவையும் சீனாவையும் இணைக்கிறது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயும் வர்த்தகம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் வழியாக கிம் ஜாங் தாண்டொங் நகரை நோக்கி வந்தார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

கிம் வருகையை முன்னிட்டு தாண்டோங் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தனது உடல் நிலை பற்றி பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கிம் ஜாங் உன்னின் இந்த பயணம் அமைந்துள்ளது.

இந்த பயணத்தின் போது சீன நாட்டின் உயர் அதிகாரிகளையும் கிம் ஜாங் உன் சந்தித்து பேசினார். இந்த ஆண்டு இறுதிக்குள் வடகொரியாவுடன் மீண்டும் பேச்சு வார்த்தை தொடங்க உள்ளதாக டிரம்ப் கூறியிருந்த இலையில், கிம் ஜாங் உன்னின் இந்த திடீர் பயணம் அமைந்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *