இதனால், நேரம் அதிகம் செலவாகிறது. அதோடு, அவ்வகையான டி.வி-க்களைப் பழுது பார்ப்பது மிகக் கடினமாகவும் உள்ளது. சில பழுது பார்க்கும் அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பழுதுபார்க்கும் தொழிலில் பயன்படுத்தப்படும் வருகிறது. ஆனாலும், ஒவ்வொரு நகரத்திலும் மலை போல எலக்ட்ரானிக்ஸ் குப்பைகள் ( Electronics Waste) தேங்கி கிடைக்கும் அவல நிலை உள்ளது .
இதற்குக் காரணம், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கும், தொழில் நுட்பத்திற்கும் உள்ள இடைவெளி அதிகம் இருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இதனால், நாங்கள் முதல் முறையாகக் கூட்டாக இணைந்து கண்டறிந்துள்ள இந்த “ஸ்மார்ட்சலோனே’ என்ற கருவி, ஒன் டச் செய்தால் 7 வினாடிகளில் தொழில்நுட்பப் பிரச்னை என்ன என்பதை உடனடியாகக் கண்டறிந்து, திரையில் காண்பிக்கும்.
மேலும், தொழில்நுட்பப் பிரச்னையைச் சரி செய்வதற்கான அறிவுரைகளையும் வழங்கும். இதனால், தொழில்நுட்பப் பிரச்னையை விரைவாகச் சரி செய்ய முடியும். எனவே, பழுது பார்க்கும் தொழிலில் இந்தப் புதிய தொழில்நுட்பக் கருவியால் நேர இடைவெளி குறையும். இதற்காக, இந்தியா முழுவதும் உள்ள 800 டி.வி பழுது பார்க்கும் தொழில்நுட்பக் கலைஞர்களை அழைத்து கரூரில் EDIO Smart Clone கருவியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும், பயிற்சி அளித்துள்ளோம்.
உலக அளவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் அதிநவீன தொழில்நுட்ப பழுது நீக்கும் கருவி என்ற சாதனையை உருவாக்கி, உலக சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளோம்” என்றார்கள்.