“LUCKY CHARM” – க்கு என்னாச்சு? மமிதா வெளியிட்ட வீடியோ! – Kumudam

Spread the love

மலையாளம், தமிழ்  திரையுலகில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் மமிதா பைஜு, தொடர்ந்து படப்பிடிப்புகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வந்த நிலையில், திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

“LUCKY CHARM” மமிதா பைஜு :

இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த “டியூட்” படத்தில் கதாநாயகியாக மிகப்பெரிய வெற்றிப்படம் கொடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக மாறியவர் மமிதா பைஜூ.

மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி, தற்போது தமிழ், மலையாளம் என படுபிஸியாக இருக்கிறார். தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் அறிமுகமாகிய சிறுகாலத்திலேயே நாயகியாக நடித்து வெற்றி படங்களை கொடுத்து “Lucky Charm” ஆக வளம் வருகிறார். 

உடல்நலகுறைவால் அட்மிட் :

சமீபத்தில், சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் மற்றும் நிவின் பாலியின் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ உள்ளிட்ட படங்களின் ப்ரோமோஷன் பணிகளில் மமிதா பைஜு தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் ஏற்பட்ட அதிகப்படியான சோர்வு மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஓணம் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என அறிவிப்பு :

ஆஸ்திரேலியாவின் க்ளைடு பகுதியில் வசிக்கும் மலையாளி சமூகத்தினர் சார்பில் செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறவிருந்த ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மமிதா பைஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தார்.

ஆனால் உடல்நிலை காரணமாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பதை வீடியோ மூலம் அவர் தெரிவித்தார். இதையடுத்து, அந்த ஓணம் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

“மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்” – மமிதா :

தனது உடல்நிலை குறித்து பேசிய மமிதா பைஜு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் இருந்தாலும் மருத்துவர்கள் முழுமையான ஓய்வு எடுக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், அதிக காய்ச்சல், உடல் வலி, அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பயணம் செய்வது சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டதாகவும் அவர்  வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் :

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மமிதா பைஜு தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் மமிதா பைஜு, உடல்நலம் தேறிய பிறகு மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *