MDMA விற்பனை: கேரள போலீஸில் கூட்டாக சிக்கிய தவெக, திமுக நிர்வாகிகள்! என்ன நடந்தது? – TVK and dmk delegates mdma case arrest by Kerala police .

Spread the love

கேரள மாநில காவல்துறையின் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு மற்றும் மாவட்ட ஆன்டி-நார்கோடிக்ஸ் ஸ்குவாட் ஆகியவை இணைந்து “ஆபரேஷன் தூஃபான்’ என்ற பெயரில் அண்டை மாநிலங்களுக்கு இடையேயான போதைப்பொருள் விநியோகச் சங்கிலியை உடைக்கும் விதமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயநாடு மாவட்டம் வைத்திரி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று மேற்கொண்ட தீவிர சோதனையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் எருமாடு பகுதியைச் சேர்ந்த நௌஃபல், கூடலூரைச்‌ சேர்ந்த முகமது நசீஃப் ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 கிராம் எம்.டி.எம்.ஏ போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இருவர் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் வயநாடு மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான நௌஸாத் மற்றும் முகமது நசீஃப்

கைதான நௌஸாத் மற்றும் முகமது நசீஃப்

பின்னணி குறித்து தெரிவித்த வயநாடு காவல்துறையினர், ” த.வெ.க கட்சி கொடி பொருத்திய ஃபார்ச்சூனர் கார் ஒன்றில் இருவரும் ஒரே இடத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். பிறகு இவர்களைத் தேடி வந்த ஒருவர் போலீஸைக் கண்டதும் தானாவே பயந்து திரும்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகம் ஏற்பட்டது‌. அந்த இரண்டு நபர்களையும் பிடித்து விசாரித்ததில் தமிழ்நாட்டின் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இதில் முகமது நசீஃப் தவெகவின் நீலகிரி மாவட்ட மேற்கு மண்டல இணைச் செயலாளர் என்றும், நௌஸாத் திமுக வின் நீலகிரி மாவட்ட இளைஞர் அமைப்பாளர் என்றும் கூறினர். இருவரும் கூட்டு சேர்ந்தே தவெக கட்சி கொடி கட்டிய வாகனத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது மட்டுமின்றி விற்பனையில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று” வருகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *