Mother-in-law and daughter-in-law vie for assets of actress Karisma Kapoor’s ex-husband; mother-in-law demands Rs 6,000 crore.-நடிகை கரிஷ்மாகபூரின் மாஜி கணவர் சொத்துக்கு போட்டிபோடும் மாமியார், மருமகள்

Spread the love

அதனை ஏற்று பதிலளித்த நீதிமன்றம், இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ராணி கபூரின் கோரிக்கைகள் என்னவென்று நீதிமன்றம் கேட்டது. அதோடு, யார் யாருடன் சண்டையிடுகிறார்கள் என்பதே தெளிவாக இல்லை என்று நீதிபதி ஜே.பி. பர்திவாலா தெரிவித்தார். இதையடுத்து பேசிய ராணி கபூரின் வழக்கறிஞர், 80 வயதைக் கடந்த ராணி கபூர் குடும்ப அறக்கட்டளையில் தனக்கான பங்கைக் கோரி வருவதாகவும், அந்த உரிமை கோரலின் மதிப்பு ரூ.6,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். விசாரணையின் போது இரு தரப்பினரும் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளும்படி கேட்டுக்கொண்ட நீதிபதிகள், மத்தியஸ்தம் மூலம் இந்த பிரச்னைக்கு ஏன் தீர்வு காண முடியவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

மத்தியஸ்தப் பேச்சுவார்த்தை முட்டுக்கட்டையை எட்டியுள்ளதாக மத்தியஸ்தர் சந்திரசூட் சமர்ப்பித்த இரண்டாவது அறிக்கையையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது. பிரியா கபூர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் முகில் ரோஹத்கி, சொத்துக்கள் மீதான ராணிகபூரின் உரிமை கோரலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பிரியா சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் அபிமன்யு பண்டாரி, அறக்கட்டளையின் சொத்துக்களில் 60 சதவீதத்திற்கு பிரியாவுக்கு உரிமை உள்ளதாகவும், மீதமுள்ள 40 சதவீதம் சஞ்சய்யின் குழந்தைகளுக்கு இடையே பிரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.

நடிகை கரிஷ்மா கபூருடனான திருமணத்தின் மூலம் சஞ்சய்க்குப் பிறந்த குழந்தைகள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி, அறக்கட்டளையின் சொத்துக்களில் 24 முதல் 26 சதவீதத்திற்கு அவர்களுக்கு உரிமை உள்ளதாகத் தெரிவித்தார்.மேற்கொண்டு மத்தியஸ்தம் தொடர பிரியா கபூர் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து இவ்வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறைப்படி விசாரணை நடைபெற இருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *