சென்னையில் ஓடும் பேருந்துகளில் தினமும் ஆயிரக்கணக்கான சுவாரசியமான, நெகிழ்ச்சியான சம்பவங்கள் அரங்கேறுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் கிளாம்பாக்கம் – திருவான்மியூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட மாநகரப் பேருந்தில் (MTC) நடத்துனரும், ஓட்டுநரும் காட்டிய மனிதாபிமானம் ஒட்டுமொத்த சென்னைவாசிகளின் இதயங்களையும் நெகிழச் செய்துள்ளது.
சமூக ஊடகங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது.
நேற்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் தடம் எண் 91 பேருந்து, வழக்கம்போல் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூர் நோக்கிப் புறப்பட்டது. இந்தப் பேருந்தில் லக்ஷ்மனன் என்பவர் நடத்துனராகப் பணியில் இருந்தார்.

பேருந்து இரும்புலியூர் நிறுத்தத்தை அடைந்தபோது, அங்கு ஒரு பெண் பயணி பேருந்தில் ஏறியுள்ளார். சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்குத் திடீரென வலிப்பு போன்ற உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த அந்தப் பெண், உடனடியாகத் தன் வசம் இருந்த மாத்திரையை எடுத்து உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதைப் பார்த்து பதறிய சக பயணிகள், உடனடியாக பேருந்தை அருகில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, அங்கு அவரை அனுமதிக்கலாமா என்று கேட்டுள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணோ, “நான் மாத்திரை போட்டுவிட்டேன், என்னை நானே சமாளித்துக் கொள்வேன்” என்று கூறி பயணிகளையும் நடத்துனரையும் அமைதிப்படுத்தியுள்ளார்.