Nani: "பாக்ஸ் ஆபீஸ் வசூல், வெள்ளிக்கிழமை ரிசல்ட்டை மனதில்கொண்டு படங்களை ஒப்புக்கொள்வதில்லை!" – நானி

Spread the love

நடிகர் நானி நடிப்பில் சமீபத்தில் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. அவர் சமீபத்தில் வெரைட்டி இந்தியா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை குறித்தும், புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றுவது குறித்தும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

நானி
நானி

அவர் பேசுகையில், “நான் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது பாக்ஸ் ஆபீஸ் வசூல் அல்லது வெள்ளிக்கிழமை ரிசல்ட்டை மனதில்கொண்டு கணக்குப் போட்டுப் படங்களை ஒப்புக்கொள்வதில்லை.

என் மனதிற்கு எந்தக் கதை சரியாகப் படுகிறதோ, அதைத்தான் தேர்வு செய்கிறேன். ஒரு படத்தில் கமிட்டானால் அடுத்த 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை அதே படத்தில்தான் நான் பயணிப்பேன். அதனால், முதலில் அந்த ஷூட்டிங் ப்ராசஸை நான் என்ஜாய் பண்ண வேண்டும்.

நான் மகிழ்ச்சியோடு முழு ஈடுபாட்டுடன் வேலை செய்தால், அதற்கான நல்ல பலன் தானாகவே தேடி வரும் என்று ஆழமாக நம்புகிறேன். ஆக்‌ஷன் படங்களில் தொடர்ந்து நடித்து போர் அடிக்கும்போது, இயல்பான எளிமையான கதைகளுக்கு மாறிவிடுவேன்.

ஒரு புதுமுக இயக்குநர் என்னிடம் கதை சொல்ல வரும்போது, அவருக்கு இயக்கம் பற்றிய அனுபவம் இருக்கிறதா என்பதைவிட, சினிமா மீது அவருக்கு எந்தளவிற்குப் பேராசையும் காதலும் இருக்கிறது என்பதைத்தான் முதலில் பார்ப்பேன். அந்தப் பேரார்வம் இருந்தால் அனுபவமின்மையை எளிதாகக் கடந்துவிட முடியும்.

Nani
Nani

எனக்குச் சிறுவயதிலிருந்தே ‘கிளாடியேட்டர்’ போன்ற ஒரு வரலாற்று ஆக்‌ஷன் காவியத்தில் நடிக்க வேண்டும் என்ற பெரிய கனவு இருந்தது. அதேபோல ‘தி பர்சூட் ஆஃப் ஹாப்பினஸ்’ படமும் என்னை மிகவும் பாதித்த ஒன்று.

ஆனால், ‘ஜெர்சி’ போன்ற ஒரு காலத்தால் அழியாத படம் எனக்கு அமைந்துவிட்டதால், அந்த ஆசை நிறைவேறிய திருப்தி எனக்கு இருக்கிறது. இப்போது முழுநேர இயக்குநராகும் எண்ணம் எதுவும் இல்லை. ஒரு நடிகனாக இந்த நிலையை நான் மிகவும் ரசித்துக்கொண்டிருக்கிறேன்!” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *