Nepal Flash floods: நேபாள வெள்ளத்தில் மாயமான 37 தமிழர்களின் நிலை என்ன? கதறும் குடும்பம்! | Nepal Flash floods: police searches 37 Tamil nadu tourists who were missing in floods

Spread the love

International

oi-Vishnupriya R

காத்மாண்டு: நேபாளத்தின் கோஷி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 37 தமிழர்களின் நிலை என்ன என்பது குறித்து அறியாமல் அவரது குடும்பத்தினர் பரிதவித்து வருகிறார்கள். அவர்கள் தேடும் பணிகள் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் நேற்று காலை கோஷி ஆற்றில் காலை 9 மணிக்கு திடீர் வெள்ளம் ஏற்பட்டது. திபெத் பகுதியில் இருந்து வந்த வெள்ளத்தால் வீடுகள், சாலைகள், பாலங்கள் மற்றும் நீர் மின் திட்டங்கள் கடும் சேதமடைந்தன.

nepal floods katmandu

ராசுவா பகுதியில் பனி சூழ்ந்த ஏரி உருகி மொத்தமாக ஏரி வெளியேறிதால் வெள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நேபாளத்திற்கு சுற்ருலா சென்ற இந்தியர்கள் 105 பேர் இந்த வெள்ளத்தில் சிக்கி மாயமானதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அது போல் அமெரிக்கா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 384 சுற்றுலா பயணிகள் மாயமாகிவிட்டனராம். இந்த நிலையில் நேபாளத்திற்கு புனித பயணமாக தமிழகத்தைச் சேர்ந்த 109 பேர் வெவ்வேறு சுற்றுலா நிறுவனங்கள் மூலம் நேபாளம், திபெத்திற்கு வந்தனர்.

கடந்த 23 ஆம் தேதி தஞ்சை, கும்பகோணம், கடலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 36 பெண்கள், 21 ஆண்கள் என நேபாளம், திபெத்திற்கு 57 பேர் சுற்றுலா சென்றது தெரியவந்தது.

அது போல் சென்னையை சேர்ந்த 49 பேர் வந்தனர். கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இவர்களில் இரு குழுவினர் பாதுகாப்பாக உள்ளனராம். மற்ற இரு குழுவினர் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.

3 பேருந்துகளில் 57 தமிழர்கள் sight seeing சென்ற நிலையில் அவர்களில் ஒரு 20 பேர் மட்டும் தொடர்பில் இருக்கின்றனராம். மற்ற இரு பேருந்துகளில் இருந்த 37 பேரின் நிலை என்ன என தெரியவில்லை. சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் நேபாள காவல் துறையினர், மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அது போல் ஈஷா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் மானசரோவர் யாத்திரைக்கு அழைத்துச் செல்லப்படுவார்களாம். அந்த வகையில் 21 குழுக்களாக சென்றவர்களில் 495 பேர் பாதுகாப்பாக திரும்பிவிட்டனராம். 743 பேர் திபெத்திலும் 148 பேர் நேபாளத்திலும், 77 பேர் தூதரக அலுவலகத்தில் சிக்கியுள்ளனராம்.

இந்த 77 பேரில் எத்தனை பேர் தமிழகத்தை சேர்ந்த ஈஷா குழுவினர் என தெரியவில்லை. இத்தனை பேர் மாயமாகிவிட்டார்கள் என்பதை ஜக்கிவாசுதேவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *