
இந்த ரிஸ்க் எடுக்க மறுக்கும் மனோபாவம் பிசினஸைத் தொடங்குவதில் மட்டுமல்ல, முதலீட்டில் நன்றாக தெரிகிறது. எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தைச் சேர்க்க நினைத்தால், அவர்கள் முதலில் நாடுவது வங்கி பிக்சட் டெபாசிட்தான்.
6.5% வட்டி என்பது மிகப் பெரிய வருமானம். பிகசட் டெபாசிட்டில் ரிஸ்க் என்பது இல்லவே இல்லை என்பது வெளிநாடுகளில் வசிக்கும் பலரது எண்ணம்.
வெளிநாடுகளில் வசிக்கும் பல தமிழர்களுடன் பேசியதில் ஐந்தில் மூன்று பேர் தங்கள் பணத்தின் கணிசமான பகுதியை வங்கி பிக்சட் டெபாசிட்டில் வைத்திருக்கின்றனர். இந்த வங்கி பிக்சட் டெபாசிட்டில் கிடைக்கும் லாபத்துக்கு எந்த வரியும் கட்டத் தேவை இல்லை என்பது வேறு எந்த முதலீட்டையும் பார்க்க முடியாமல் வெளிநாட்டுத் தமிழர்களின் கண்களை மறைத்துவிடுகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களிடம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி பேசினால், ‘அய்யய்யோ, அதில் பணம் போட்டால், நஷ்டம் வந்துவிடுமே! என் நண்பர் இப்படித்தான் 80% பணத்தை இழந்தார்’ என்று சொல்வார்கள்.
உள்ளபடி பார்த்தால், மியூச்சுவல் ஃபண்டில் ஒருவர் சரியாக முதலீடு செய்திருந்தால், 80% வேண்டாம், 50% பணத்தைக்கூட இழப்பதற்கு வாய்ப்பில்லை. மியூச்சுவல் ஃபண்டில் தப்பும் தவறுமாக முதலீடு செய்துவிட்டு, பிற்பாடு பணம் போச்சு!
மியூச்சுவல் ஃபண்ட் முதலேடே மோசம் என்று ஒதுங்கி நிற்பது எப்படி சரியாகும்? வெறும் வங்கி பிக்சட் டெபாசிட் மூலம் எதிர்காலத் தேவைகளுக்கான பணம் அத்தனையும் சேர்த்துவிட முடியுமா?