NZ vs IND: "சிராஜை நீக்குவது கடினமான முடிவுதான்; ஆனால்…" – விமர்சனங்களுக்கு கில்லின் பதில் என்ன?

Spread the love

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாதது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பி இருக்கிறது.

ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மற்றும் அறிமுக வீரர் அன்ஷுல் கம்போஜ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில், அனுபவ வீரரான சிராஜ் ஓரங்கட்டப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

முகமது சிராஜ்
முகமது சிராஜ்

வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில், சிராஜ் அணியில் சேர்க்கப்படாதது குறித்து பேசியிருக்கிறார்.

“சிராஜ் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். அவரை அணியிலிருந்து நீக்குவது என்பது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஆரம்பக்காலம் முதலே எனக்கு அவரை நன்றாகத் தெரியும்.

சுப்மன் கில் பதில்
சுப்மன் கில் பதில்

டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பே அவரிடம் நேரில் பேசி, இந்த முடிவுக்கான காரணத்தை விளக்கினேன். அவரும் அதைப் புரிந்துகொண்டார். தற்போதைய ஃபார்மை அடிப்படையாகக் கொண்டே அணியைத் தேர்வு செய்தோம். சிராஜ் எப்படிப்பட்ட வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். நிச்சயம் இதிலிருந்து அவர் மிகச் சிறப்பாக மீண்டு வருவார்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *