O.M: “விஜய் சார் இனி நடிக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டார்; அதனால் தனுஷ் சார்…” – சாய் பல்லவி |sai-pallavi-requests-dhanush-to-continue-acting-at-om-event

Spread the love

சாய் பல்லவி பேசுகையில், “சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘ரௌடி பேபி’ பாடலை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். இப்போதும் நான் வட இந்தியாவுக்குச் சென்றாலோ அல்லது குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்களைச் சந்தித்தாலோ, அவர்களுக்கு என் பெயர் கூடத் தெரியாது.

‘இதுதான் ரௌடி பேபி அக்கா’ என்றுதான் முதலில் அடையாளம் காண்கிறார்கள். அதற்குப் பிறகு, சரியான ஒரு கதை அமையும்போது தனுஷ் சாருடன் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அது ‘ஓ.ம்’ திரைப்படத்தின் மூலம் நடந்திருப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்றவர், “இந்த நிகழ்வுக்கு வரும்போது இது அரசியல் நிகழ்வு போல இருக்கிறது என யோசித்துக் கொண்டே வந்தேன்.

நீங்கள் வாழ்க்கையில் எந்த முடிவு எடுத்தாலும், உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பம். எனக்குள் இருக்கும் ஒரு நடிகையாகச் சொல்கிறேன். இப்போதுதான் நம்ம விஜய் சார் அரசியலுக்குச் சென்றுவிட்டு இனி நடிக்க மாட்டேன் என்கிறார்.

அதனால், தனுஷ் சார் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால், அவரைப் போன்ற யதார்த்தமான நடிப்பையும், இளைஞர்களைக் கொண்டாட வைக்கும் கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க உண்மையான கலைஞர்கள் தேவை.

எனவே, நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் தயவுசெய்து தொடர்ந்து நடியுங்கள். இல்லையென்றால், ஒரு மிகச்சிறந்த நடிகரை நாம் அனைவரும் இழந்துவிடுவோம்” எனப் பேசினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *