பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல் வழங்கும் அங்கீகாரத்தை; தொடர்ச்சியாக 10-வது ஆண்டாகப் பெற்றுள்ள ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், ‘டாப் கன்ட்ரிபியூட்டர் – செயின்’ விருதுடன், மேலும் மூன்று சிறப்பு – ஷோரூம் விருதுகளையும் வென்றுள்ளது.
2026 ஜூலை 8-ஆம் தேதி கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத்தில் நடைபெற்ற ‘பிளாட்டினம் சீசன் ஆஃப் லவ் 2026 விருது’ வழங்கும் விழாவில், பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனல் (PGI) அமைப்பின் அங்கீகாரத்தை, தொடர்ச்சியாக 10-வது ஆண்டாகப் பெற்று, தனது புகழ்மிக்க பயணத்தில் மேலும் ஒரு மைல்கல்லைப் பதித்துள்ளது, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ். ஒரு தசாப்தமாகத் தொடர்ந்து கிடைத்து வரும் இந்த அங்கீகாரம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை, சிறப்பான வடிவமைப்புகள், புதுமை மற்றும் உலகத் தரத்திலான பிளாட்டின நகைகளை வழங்கும் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், பிளாட்டின நகைப் பிரிவில் ஜிஆர்டியின் தொடர்ச்சியான முன்னணி இடத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகளில், பிளாட்டின நகைகள் சில்லறை விற்பனையில் பிராண்டின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மதிப்புமிக்க ‘டாப் கன்ட்ரிபியூட்டர் – செயின்’ விருதைப் பெற்றது. இதனுடன், ஜிஆர்டியின் கோட்ஸ் ரோடு மற்றும் உஸ்மான் ரோடு ஷோரூம்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதற்காக ‘சஸ்டெய்ன்ட் எக்ஸலன்ஸ்’ விருதுகளையும், சேலம் ஷோரூம் சிறப்பான வளர்ச்சி மற்றும் பங்களிப்பிற்காக ‘அன்ஸ்டாப்பபிள்’ விருதையும் பெற்றது. இந்த விருதுகள், ஜிஆர்டியின் வலுவான சில்லறை விற்பனை வலையமைப்பையும், அதன் அனைத்து ஷோரூம்களிலும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் சிறப்பையும் மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் மதிப்பிற்குரிய நகை பிராண்டுகளில் ஒன்றாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகின்றன.
இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ‘ஆனந்த்’-அனந்தபத்மநாபன் அவர்கள் கூறுகையில், “பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனலின் அங்கீகாரத்தை; தொடர்ந்து பத்து ஆண்டுகளாகப் பெறுவது, ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகப்பெரிய பெருமையையும், அரிய மைல்கல்லையும் குறிக்கிறது. இந்த அங்கீகாரம், எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நீடித்த நம்பிக்கையையும், எங்கள் குழுவினரின் அர்ப்பணிப்பையும், தொழிலின் ஒவ்வொரு துறையிலும் சிறப்பை நோக்கிய எங்கள் இடையறாத முயற்சியையும் பிரதிபலிக்கிறது. இந்த கவுரவத்திற்காக பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, சிறப்பான பிளாட்டின நகை கலெக்ஷன்களை உருவாக்குவதில் தொடர்ந்து உறுதியாக செயல்படுவோம்.” என்றார்.
மேலும் இது குறித்து ஜிஆர்டி ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், “தொடர்ந்து ஒரு தசாப்த காலமாக கிடைத்து வரும் இந்த அங்கீகாரம், தரம், புதுமை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் நாங்கள் தொடர்ந்து செலுத்தி வரும் உறுதியான கவனத்திற்கு கிடைத்த சான்றாகும். அண்மையில், ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் பிரீத்தி அஷ்வின் இணைந்து நடித்துள்ள எங்களின் ‘மென் ஆஃப் பிளாட்டினம்’ விளம்பரப் பிரச்சாரம், இன்றைய வாடிக்கையாளர்களிடையே பிளாட்டின நகைகளின் கவர்ச்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அதே வேளையில், இந்த கவுரவம், தினந்தோறும் தங்களது அர்ப்பணிப்பாலும், விடாமுயற்சியாலும் ஜிஆர்டி பிராண்டிற்கு உயிரூட்டும் எங்கள் ஷோரூம் பணியாளர்களுக்கும் உரியது. அதைவிட முக்கியமாக, பல ஆண்டுகளாக ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் மீது எங்கள் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள மகத்தான நம்பிக்கைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் இதை கருதுகிறோம். இந்த கவுரவத்திற்காக பிளாட்டினம் கில்ட் இன்டர்நேஷனலுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், பிளாட்டின நகைப் பிரிவில் புதிய அளவுகோல்களை தொடர்ந்து உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.” என்றார்.