தேசியக் கல்விக் கொள்கையின் (NEP 2020) மும்மொழிக் கொள்கையை முந்தைய தி.மு.க அரசு எதிர்த்ததால், மத்திய அரசு “சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்திற்கான சுமார் ரூ. 3,500 கோடி நிதியை நிறுத்தி வைத்தது. தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய ஆட்சி அமைந்ததும், நிறுத்தி வைக்கப்பட்ட நிதியைப் பெற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “இனிவரும் காலங்களில் மாணவர்களின் எண்ணிக்கையும், வருகையும் அதிகரிக்கும். இருமொழி கொள்கை என்பதுதான் எங்கள் கட்சியின் கொள்கை. அதில் மாற்று கருத்தே கிடையாது. கொள்கை சமரசம் என்று பேச்சுக்கே இங்கு இடமில்லை” என்றிருக்கிறார். அழுத்தத்திற்கு நாங்கள் அடிபணிய மாட்டோம்” என்று பேசியிருந்தார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேட்டிக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய முதல்வர் விஜய் அவர்கள் முதலில் தமிழ்நாட்டு மாணவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கும் எது சிறந்தது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.