Pregnant Woman Murdered in Pudukkottai: Mother-in-Law, 5 Others Arrested | நாத்தனார்களின் திருமணம் மீறிய தொடர்பு; கர்ப்பிணி கொடூரக் கொலை – மாமியார் உட்பட சிக்கிய 6 பேர்

Spread the love

போலீஸ் வட்டாரம் மேலும் தொடர்ந்தபோது, “கொலை செய்து முடித்ததும், அதனை இயற்கை மரணமாக மாற்ற ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். சந்தியாவின் வாயிலும் மூக்கிலும் பிரெட்டைக் குத்தித் திணித்து, தொண்டையில் பாலை ஊற்றியுள்ளனர்.

அதன் பின், “பிரெட்டைப் பாலில் நனைத்து சாப்பிட்டபோது விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறி மயங்கி விழுந்துவிட்டாள்’ என மாமியார் பானுமதி நாடகமாடியுள்ளார். உடனடியாகச் சந்தியாவை சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே சந்தியாவின் உயிர் பிரிந்துவிட்டது” என்று தெரிவித்தனர்.

கணேஷ் நகர் காவல் நிலையப் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், சந்தியாவின் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்னரே உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

“உடற்கூறாய்வு அறிக்கையில், சந்தியா பிரெட் சாப்பிட்டு மூச்சுத்திணறி இறக்கவில்லை… அவரது கழுத்து துப்பட்டாவால் நெரிக்கப்பட்டு, முகத்தில் தலையணையை அமுக்கிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது.

இதையடுத்து சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றி, பாண்டித்துரையின் வீட்டாரைப் பிடித்து எங்கள் பாணியில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினோம். விசாரணையில், திருமணம் மீறிய உறவு விவகாரத்தைத் தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்து, திட்டமிட்டுச் சந்தியாவைக் கொலை செய்ததை 6 பேரும் ஒப்புகொண்டனர்.

இதனையடுத்து:

பாண்டி மீனா (33) – நாத்தனார்

பொற்கொடி (29) – நாத்தனார்

பானுமதி (50) – மாமியார்

கனிமொழி (27) – உறவினர்

செல்வி (38) – உறவினர்

கார்த்தி (24) – உறவினர்

ஆகிய 6 பேரையும் உடனடியாகக் கைது செய்தோம். கார்த்தியை புதுக்கோட்டை மாவட்டச் சிறையிலும், மாமியார் மற்றும் நாத்தனார்கள் உட்பட 5 பெண்களைத் திருச்சி பெண்கள் தனிச்சிறையிலும் அடைத்துள்ளோம்” என்று காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாத்தனார்களின் திருமணம் மீறிய தொடர்பை அம்பலப்படுத்திய ஒரே காரணத்திற்காக, 6 மாதக் கர்ப்பிணியின் உயிரைப் பறித்த இந்தச் சம்பவம் புதுக்கோட்டை வட்டாரத்தையே உலுக்கியுள்ளது!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *