சாய் அபியங்கரின் 6-வது சுயாதீன பாடலான ‘ரதிமா’ பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்பாடலில் நடிகை பாக்கியஸ்ரீ போர்ஸே நடனமாடியிருக்கிறார். இப்பாடலைப் பாராட்டி இயக்குநர் அட்லீ, அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், “இந்த ‘ரதிமா’ பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பாடல் வெளியானதிலிருந்து இதுவரை நூறு முறைக்கும் மேல் கேட்டுவிட்டேன். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பாடல் இன்னும் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது.
சாய், உன்னை நினைத்து மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. நீ இசையமைக்கும் விதமும், ஒவ்வொரு பாடலையும் நேர்த்தியாகக் கொண்டு சேர்க்கும் விதமும், உனது ஒவ்வொரு புதிய படைப்பிலும் உன்னையே நீ மிஞ்சி வெளிப்படுத்தும் திறமையும் உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. நடிகை பாக்கியஸ்ரீ மிகவும் அற்புதமாக நடனமாடியிருக்கிறார்.
@SaiAbhyankkar @Lyricist_Vivek @thinkmusicindia @BhagyashriBose pic.twitter.com/i6Hsz7mOt0
— atlee (@Atlee_dir) August 31, 2026
நான் சாய் அபியங்கரின் தீவிர ரசிகன். உன்னுடைய அடுத்த பாடலுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். தொடர்ந்து மேன்மேலும் உயரப் பறக்க வாழ்த்துகள்! இப்பாடலின் கொரியோகிராஃபி பிரமாதமாக உள்ளது.
ஒளிப்பதிவாளர் மற்றும் இசை வீடியோ இயக்கியவர் இருவரும் சேர்ந்து காட்சிகளாகக் கதையை நகர்த்திச் சென்ற விதம் மிக அருமை. இவ்வளவு அற்புதமாக வீடியோவை உருவாக்கியதற்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் விவேக்கின் வரிகள் சிறப்பாக அமைந்துள்ளன. அனைவருக்கும் வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.