Rain Alert: வருகிற 2-ம் தேதி வங்கக் கடலில் புயல்? தமிழ்நாட்டில் எங்கெங்கே மழை? வானிலை மைய அப்டேட்!

Spread the love

இந்திய வானிலை மையம் தற்போது லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளது.

“தெற்கு அந்தமான் கடல், அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நேற்று நிலவியது.

அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்டோபர் 31) காலை 8:30 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிக்கோபார் தீவுகள் – அந்தமான் கடல் பகுதியில் ‘நன்கு அழுத்தமடைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக’ நிலவுகிறது.

இது அடுத்த 6 மணி நேரத்தில் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதியில் ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ வலுப்பெறக்கூடும்.

மழை
மழை

அதனைத் தொடர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து ‘புயலாக’ மாறக்கூடும்.

பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 2026-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி மாலையில் ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதியை ஒட்டிய மத்திய-மேற்கு வங்கக்கடல் பகுதியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

நாளை (நவம்பர் 1) முதல் நவம்பர் 6-ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் எங்கெங்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை…

நவம்பர் 1, 2026 - தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 1, 2026 – தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 2, 2026 - தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 2, 2026 – தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 3, 2026 - தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 3, 2026 – தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 4, 2026 - தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 4, 2026 – தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 5, 2026 - தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 5, 2026 – தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 6, 2026 - தமிழ்நாடு மழை நிலவரம்
நவம்பர் 6, 2026 – தமிழ்நாடு மழை நிலவரம்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *