Ramayana: "சின்ன சின்ன பிரச்னைகளைக் கண்டுக்காதீங்க!" – 'ராமாயணா' படம் குறித்து யஷ்

Spread the love

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகிறது.

Ramayana Trailer - Yash
Ramayana Trailer – Yash

நேற்றைய தினம் ஐதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் யஷ், ரசிகர்கள் இப்படத்தின் சின்ன சின்ன பிழைகளைப் பெரிதுபடுத்தாமல் பார்க்க வேண்டாம் என்று பேசியிருக்கிறார்.

அவர் பேசுகையில், “நமது இந்திய இதிகாசத்தை உலக மேடையில் மிக உயரமாகக் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தனது பணம், புகழ் என எல்லாவற்றையும் பந்தயம் கட்டி இந்தப் பிரமாண்டமான முயற்சியில் இறங்கியுள்ளார்.

மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். தயவுசெய்து கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்பத்தில் சின்ன சின்ன தவறுகள் அல்லது பிழைகளைக் கண்டுபிடித்துக் கொண்டிருக்காதீர்கள். திறந்த மனதுடன் இந்தப் படத்தைப் பாருங்கள்.

தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா போன்ற தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர்களை நாம் இப்போது இழந்துவிட்டால், இந்திய சினிமா மீண்டும் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விடும்.

நடிகர் யஷ்
நடிகர் யஷ்

தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி என அனைத்துத் திரைத்துறை ரசிகர்களுக்கும், எனது நலம் விரும்பிகளுக்கும் நான் வைக்கும் ஒரே கோரிக்கை இதுதான்.

இந்த ஒரு முறை நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நமது இந்தியக் கதையின் பிரமாண்டத்தை உலகிற்கு நிரூபித்துக் காட்டுவோம்.

லாஸ் ஏஞ்சலிஸில் மிக வசதியாக பிசினஸ் செய்து கொண்டிருந்த தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா, ஆஸ்கர் விருதுகளை வென்றாலும் ‘நமது இந்திய சினிமா உலக அளவில் இந்த உயரத்தை அடைய வேண்டும், அப்போதுதான் எனக்கு முழு மகிழ்ச்சி’ என்று என்னிடம் கூறுவார். அப்படிப்பட்ட ஒரு கலைஞனை நாம் கொண்டாட வேண்டும்!” எனப் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *