நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ராமாயணம் – தி ரைஸ் ஆஃப் எ லெஜண்ட்’. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்க, இத்திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் மற்றும் ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும் நடித்துள்ளனர்.
ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர், இந்தியாவின் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆகிய இருபெரும் உலகளாவிய ஆளுமைகள் இணைந்து இப்படத்திற்கு பின்னணி இசையமைத்திருக்கிறார்கள்.
அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர்கள் ரன்பீர் கபூர், யாஷ், சாய் பல்லவி, ரகுல் பிரீத் சிங், ஏ.ஆர்.ரஹமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்,“இந்த திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியது, கற்றலுக்கான ஒரு பயணமாகவே பார்கிறேன். பெற்றோரிடம், குழந்தைகளிடம், மனைவியிடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த ராமாயணா சொல்கிறது. அறநெறிகளைக் கற்பிக்கும் ஒரு சிறந்த கதாபாத்திரத்தைப் பற்றியது என்றும் நான் நினைக்கிறேன். எனவே இதில் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது, இது ஒரு அழகான விஷயம்.