நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே உள்ளிட்டோர் நடித்துள்ள “ராமாயணா: பார்ட் 1′ திரைப்படம் கடந்த நவம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. உலகளவில் ரூ. 1,700 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனைப் படைத்திருக்கும் இந்தப் படம், ஆஸ்கர் ரேஸிலும் நுழைந்திருக்கிறது.
99-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் மார்ச் 14-ம் தேதி ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கான சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்யும் நிகழ்வு தொடங்கி நடந்துவருகிறது. அதன் அடிப்படையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் (Visual Effects) பிரிவில் சிறந்த 20 திரைப்படங்களை ஆஸ்கர் விருது தேர்வுக் குழு பட்டியலிட்டிருக்கிறது.

அதில், டெனிஸ் வில்லெனுவேவின் ‘டூன்: பார்ட் த்ரீ’, கிறிஸ்டோபர் நோலனின் ‘தி ஒடிஸி’, பில் லார்ட் மற்றும் கிறிஸ்டோபர் மில்லரின் ‘புராஜெக்ட் ஹெய்ல் மேரி’, ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘டிஸ்க்ளோசர் டே’, ஆண்டனி மற்றும் ஜோ ரூசோ இயக்கிய மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ உள்ளிட்ட படங்களுடன் நிதேஷ் திவாரியின் ‘ராமாயணா’வும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.