Rashmika: ‘இதில் என்ன தவறு இருக்கிறது?’- விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சைக்கு விளக்கமளித்த ராஷ்மிகா| Rashmika Mandanna hits back at trolls over vijay devarakonda

Spread the love

அவருக்கு அவகாசம் தேவைப்பட்டதும் நியாயமானதுதான்!

வாழ்க்கையில் நான் என்ன விரும்புகிறேன் என்பதில் எனக்குத் தெளிவு இருந்தது சரி என்றால் வாழ்க்கையின் நடைமுறை எதார்த்தங்களைப் புரிந்து கொண்டு முடிவெடுக்க அவருக்குச் சற்று கால அவகாசம் தேவைப்பட்டதும் நியாயமானதுதான். அது எங்களுக்கிடையேயான காதலை எந்த விதத்திலும் மாற்றிவிடவில்லை. நான் முழுக்க முழுக்க உணர்வுகளால் இயங்குபவள்; அவர் யோசித்து நிதானமாகச் செயல்படுபவர். வாழ்க்கை சிறக்க இந்த இரண்டு குணங்களுமே தேவை.

எங்களைப் பொறுத்தவரை, திருமணம் என்பது காதலைக் காட்டுவதற்காக மண்டியிட்டு மோதிரம் அணிவிக்கும் வெறும் சடங்கு மட்டுமல்ல. அவையெல்லாம் வெளிப்புற அலங்காரங்கள் மட்டுமே. ஒன்றாக இணைந்து ஒரு அழகான வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் உருவாக்குவதுதான் உண்மையான திருமணம். இதுவரை அதை நாங்கள் சிறப்பாகவே செய்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா

ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா

ஆயிரம் முறை திருமணம் செய்துகொள்வேன்

என் கணவர் மீது எனக்கு அளவுகடந்த காதல் இருக்கிறது, இதில் என்ன தவறு? நான் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஆணைக் காதலிக்கவில்லை என்றால், வேறு எதற்காக அவரைத் திருமணம் செய்ய வேண்டும்? அவர்தான் என் வாழ்நாள் துணை. சாதாரண நாட்களிலும், கஷ்டமான தருணங்களிலும் எனக்குத் தோள கொடுக்கும் நண்பர்; என் குழந்தைகளின் தந்தை; நான் முதுமையடையும் வரை என்னோடு வாழப்போகும் மனிதர்.

உங்கள் மீது ஆழமான காதல் கொண்ட ஒருவரை வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுங்கள். திருமணத்திற்குப் பிறகும் அவரைப் பார்த்து, ‘நாம் மீண்டும் திருமணம் செய்துகொள்ளலாமா?’ என்று கேட்கத் தோன்றும் அளவுக்கு அவர் உங்கள் மீது அன்பைப் பொழிய வேண்டும். அவரை நான் நூறு முறை அல்ல, ஆயிரம் முறை கூட மீண்டும் திருமணம் செய்துகொள்வேன்.

நாங்கள் இருவரும் எங்களுடைய சொந்த உழைப்பாலும் தேர்வுகளாலும் இந்த வாழ்க்கையை உருவாக்கியிருக்கிறோம். எங்களுக்கான வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும், யாருடன் வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சுயாட்சியும் அறிவும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் ஒருவரையொருவர் மனப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்தோம்; வாழ்வின் இறுதிவரை மீண்டும் மீண்டும் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருப்போம்.

வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், மகிழ்ச்சிகள், மன அழுத்தங்கள் என அனைத்தையும் கடந்து, ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்துகொள்வதற்குப் போதுமான நேரத்தையும் இடைவெளியையும் கொடுக்க வேண்டும் என்பதை உணர்த்துவதுதான் அந்த உரையாடலின் நோக்கம்” என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *