சென்னை:
மறைந்த சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயர் சென்னையில் வசித்து வந்த இல்லம் அமைந்து உள்ள சாலைக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
எஸ்.பி.பி.பெயரில் சாலை
இதற்கான அறிவிப்பை எஸ்.பி.பி.யின் நினைவு நாளான நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அவரது எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண் உள்ளிட்ட குடும்பத்தினர் நன்றி தெரிவித்து உள்ளனர்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பெயரில் சாலை உள்ளதற்கு திரைஉலகினரும் வரவேற்பு தெரிவித்து உள்ளார்கள்.
இளையராஜா நன்றி
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்பிரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டு உள்ளார்.