RR vs SRH: “எதிரணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், நாங்கள்.!” – வெற்றி குறித்து ரியான் பராக்| “Even though the opposition started aggressively, we…!” – Riyan Parag on the victory

Spread the love

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் vs ஹைதராபாத் போட்டியில், 47 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று குவாலிஃபையர் 2-ல் குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது.

நடந்து முடிந்த இரண்டு ப்ளே ஆஃப் போட்டிகளிலும், முதலில் பேட்டிங் செய்த அணிகள் இமாலய இலக்கை நிர்ணயித்ததும், அதை துரத்த முடியாமல் எதிரணி ஆல் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்த போட்டியிலும் 196 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஹைதராபாத் அணி.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய அணியின் கேப்டன் ரியான் பராக், ” இது ஒரு நல்ல போட்டி. இன்னும் நாங்கள் 260 ரன்கள் வரை எடுத்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

வைபவ் நல்ல தொடக்கம் கொடுத்த பிறகு, இன்னிங்ஸை எப்படிப் பெரிய ஸ்கோராக முடிக்க வேண்டும் என்பதில் இன்னும் வேலை செய்ய வேண்டும். எதிரணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடினாலும், நாங்கள் அமைதியை இழக்காமல் மீண்டும் போட்டிக்குள் வந்தோம்.

வைபவுடன் உண்மையில் அதிகமாக எதுவும் பேச மாட்டோம். அவரை சுதந்திரமாக விட்டுவிடுவோம். அவர் பேட்டிங்கை மிகவும் விரும்புகிறார். அதனால் நெட்ஸில் நிறைய பயிற்சி கொடுக்கிறோம். பிறகு, அவர் மைதானத்தில் சென்று தனது வேலையை செய்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *