SEO Title: “Coimbatore Youth, 24, Struggles for 4 Years Without Aadhaar Card | கோவை: `24 வயது… ஆதார் அட்டை கூட இல்லை!’ – நான்கு ஆண்டுகளாக அலையும் கோவை இளைஞர்

Spread the love

இதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது குறித்து பேசும் போது அதை வைத்து ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்கள்.

ஆதார் சேவை மையத்துக்கும் பல முறை சென்றேன். ஆனால், பிற அடையாள ஆவணங்கள் இல்லாததால் விண்ணப்பத்தைப் பதிவு செய்ய முடியவில்லை.”

ஆதார் அட்டை எடுக்கச் சென்றால் வாக்காளர் அட்டை கேட்கிறார்கள், வாக்காளர் அட்டை எடுக்கச் சென்றால் ஆதார் அட்டை கேட்கிறார்கள்.

“ஆதார் அட்டை இல்லாததால் வங்கிக் கணக்கு தொடங்க முடியவில்லை. எங்கள் சமூகத்துக்குக் கிடைக்கும் அரசின் நலத்திட்டங்களையும் பெற முடியவில்லை. என் பெயரில் ஒரு செல்பேசி இணைப்பைக்கூட வாங்க முடியவில்லை.

இன்றைக்கு நடக்கும் முகாமை போல ஏராளமான முகாம்களுக்கு சென்று விட்டேன். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மாறாக நான் போய் வந்த பயணச் செலவுதான் அதிகரித்திருக்கிறது. இந்த முகாமிலாவது எனக்கு தீர்வு கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

சீனுவின் நிலையை கேட்டறிந்த கிராம நிர்வாக அலுவலர் “இந்த முகாமில் ஏதாவது ஒரு சான்று இருந்தால் மட்டுமே உடனடியாக ஆதார் அட்டையை பெற முடியும்”. ஆனால் சீனுவிடம் வேறு சான்றுகள் இல்லாததால், பழைய குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு அவர் குறிப்பிட்ட முகவரியில் வசித்து வருவதாக சான்று வழங்கினார்.

அந்தச் சான்றை அடிப்படையாகக் கொண்டு “மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்குமாறும், தேவையான உதவிகளுக்கு தன் அலுவலகத்தை அணுகலாம்” என்றும் கிராம நிர்வாக அலுவலர் அறிவுறுத்தினார்.

இந்தச் சான்றை பயன்படுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்குமாறு அங்கிருந்த மற்ற அதிகாரிகளும் சீனுவுக்கு வழிகாட்டினர்.

கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய சான்றுடன் மீண்டும் மாவட்ட நிர்வாகத்தை அணுகத் தயாராகியிருக்கிறார் சீனு. நான்கு ஆண்டுகளாக ஒரு ஆதார் அட்டைக்காக தொடரும் அவரது காத்திருப்புக்கு இந்த முறையாவது முடிவு கிடைக்குமா?

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *