‘பெயரளவில் தான் நாம இருக்கோம், மத்தபடி அங்க நமக்கு வேலையே கிடையாது’ என புலம்புகிறார்கள் தமிழ் சீரியல் ஆர்ட்டிஸ்டுகள் சிலர்.
என்ன விவகாரமென காது கொடுத்தோம்.
‘இப்ப சமீபத்துல முடிஞ்ச சீரியலுங்க அது. தயாரிப்பாளர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். அதனாலாயே ஷூட்டிங்கை பெங்களூருவுல வச்சார். லைட் மேன் உள்ளிட்ட டெக்னீஷியன்கள் பெங்களூரு. கேமரா மேன் சென்னையில இருந்து போனப்ப, ‘அப்படின்னா நாங்க ஒர்க் பண்ண மாட்டோம்’ம்னு லைட் மேன் உள்ளிட்ட அங்க ஒர்க் பண்ணிட்டிருந்த மத்த தொழில் நுட்ப ஆட்கள் பிரச்னை செஞ்சாங்க.
இதெல்லாம் கூட பரவால்ல, ஒரு கட்டத்துல நாலு முக்கியக் கேரக்டர்கள் தவிர மத்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் எல்லாருமே அந்த ஊரைச் சேர்ந்தவங்களா கமிட் ஆகிற ஒரு சூழலும் உருவாச்சு. அந்த ஆர்ட்டிஸ்டுகளுக்கு எந்த பிரச்னையும் வராது. ஆனா சென்னையில இருந்து போற ஆர்ட்டிஸ்டுகளை எப்ப வெளியேத்தலாம்னுதான் யோசிட்டிட்டிருப்பாங்க.
நம்மூர் நடிகை ஒருவர் கன்வேயன்ஸ் கேட்க, கேரக்டரை முடிச்சு விட்டுட்டங்க. விஷயம் சீரியல் நடிகர் சங்கம் வரை போய் நடிகைக்கு வர வேண்டிய பணத்தை வாங்கிக் கொடுக்க வேண்டியதாப் போச்சு.
இப்ப அதே புரடியுசருக்கு சேனலில் திரும்பவும் ஸ்லாட் கிடைச்சிருக்கு. அடுத்த சீரியல்லயும் இதே அலப்பறைகள் தொடர்ந்தா போராட்டத்தை நடத்தவும் தயாரா இருக்கோம்” என்கிறார்கள்.