இதனாலதான் மகன் கல்யாணத்துக்கு பலரையும் கூப்பிடலை!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘பாக்கியலட்சுமி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த நடிகை கம்பம் மீனாவின் மகன் விஜய சரவணன் திருமணம் இரு தினங்களூக்கு முன் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் வைத்து நடைபெற்றது,
மணப்பெண் அனிஷா ஹெச்.ஆர்-ஆக பணி புரிகிறாராம்.
திருமணத்துக்கு சின்னத்திரை வட்டாரத்தில் நெருங்கிய நட்பு வட்டத்தில் கூட யாருக்கும் மீனா தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற தகவல் கிடைக்க, மீனாவிடமே பேசினோம்.
”எனக்கு ரெண்டு மகன்கள். விஜய சரவணன் மூத்த மகன். ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து அந்த வாழ்க்கை சரியாக அமையாததால் முறைப்படி அதுல இருந்து வெளியில வந்துட்டான். அதனால இன்னொரு திருமணம் வேண்டாம்னு சொல்லிட்டிருந்தான்.

ஒரு அம்மாவா என்னால அப்படி விட முடியுமா? அதனால அவன்கிட்ட தொடர்ந்து பேசி கன்வின்ஸ் செய்து கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சேன். மேட்ரிமோனியல் மூலமா பொண்ணு அமைஞ்சது. கல்யாணம் சிம்பிளா இருக்கட்டுமேனுதான் கோவில்ல வச்சு பண்ணினோம். ஆனா பொண்ணு வீட்டுக்காரங்க அவங்க விருப்பப்படி சொந்த பந்தங்களைக் கூப்பிட்டிருந்தாங்க. அவங்க விருப்பத்துக்கு குறுக்க நிற்க விரும்பலை. நல்லபடியே திருமணம் முடிஞ்சிடுச்சு” என்றார் அவர்.