இந்திய கடலோர காவல்படை சவாலான இரவு நேர மீட்பு நடவடிக்கையின் போது கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் இருந்த 11 பேரை மீட்டது.
சரக்கு கப்பல்
கொல்கத்தாவில் இருந்து போர்ட் பிளேர் நோக்கி சரக்கு ஒன்று கப்பல் சென்று கொண்டிருந்தபோது, சாகர் தீவுக்கு (மேற்கு வங்கம்) தெற்கே சுமார் 90 கடல் மைல் தொலைவில் சென்ற போது அந்த கப்பல் திடீரென மூழ்கியது.
மேற்குவங்கத்தில் செயல்படாத விரைவு நீதிமன்றங்கள்: மம்தா கடிதத்திற்கு மத்திய அரசு பதிலடி
இதுபற்றி சென்னையில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு நேற்று(25ந்தேதி) மாலை தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் உள்ள கடலோர காவல் படையின் பிராந்திய தலைமையகம் (வடகிழக்கு) உடனடியாக இரண்டு கடலோர ரோந்து கப்பல்களையும் ஒரு டோர்னியர் விமானத்தையும் சம்பவ இடத்திற்கு அனுப்பியது.
11 பேர் மீட்பு
டோர்னியர் விமானத்தின் வழிகாட்டுதலுடன், கடலோர காவல்படை கப்பல் சம்பவ இடத்தை அடைந்தது. இரவு நேரத்தில் சவாலான வானிலை இருந்தபோதிலும் காவல்படை கப்பல்களான சாரங் மற்றும் அமோக், டோர்னியர் விமானத்துடன் சேர்ந்து, ஒருங்கிணைந்து மீட்பு பணிமேற்கொள்ளப்பட்டது.இதில் மூழ்கிய சரக்குகப்பலில் கடலில் தத்தளித்த 11 பேரை பத்திரமாக மீட்டனர்.