குனால் இரண்டு மாதத்திற்கு முன்பு இதற்காக துப்பாக்கி வாங்கி இருக்கிறான். ராதாவை சந்தித்து அந்த துப்பாக்கியை மும்பையில் கொடுக்கும்படி குனால் கேட்டுக்கொண்டார். இதையடுத்து ராதாவும், அவரது தோழி பபிதாவும் இம்மாதம் 15ம் தேதி டெல்லியில் இருந்து ரயில் மூலம் மும்பை வந்துள்ளனர். இரண்டு நாள் கழித்து அவர்கள் மும்பையில் உள்ள தாதர் சென்றுள்ளனர். அங்கு இரண்டு பெண்களும் ஓட்டலில் அறை எடுத்து தங்கினர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி இருந்த பேக்கை ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வாங்கிச்சென்றார். அடுத்த நாளே டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கியை கொடுத்துவிட்டு இரண்டு பெண்களும் உடனே அங்கிருந்து ரயில் மூலம் சென்றுவிட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் நடத்திய விசாரணையில், டைகர் ஷெராப்பை கொலை செய்து ஒரு வித பயத்தை பரவ விடதிட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் உண்மையில் டைகர் ஷெராப்பை கொலை செய்ய வரவில்லை என்றும், வேறு ஒரு முக்கிய பாலிவுட் பிரமுகரை கொலை செய்ய வந்ததாகவும், அந்த குறிப்பிட்ட நபர் அடிக்கடி செல்லும் இடங்களைச் சோதித்துப் பார்த்த பிறகு, அவரை அணுக முடியாது என்பதைத் உணர்ந்து திட்டத்தை மாற்றியதாக தெரிவித்தனர்.
ரசிகர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளிகள் (ரீல்ஸ்) மூலம், நடிகர் டைகர் ஷெராபிற்குப் போலீஸ் பாதுகாப்பு இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட அவர்கள், தங்கள் இலக்கை அவர் பக்கம் மாற்றிக்கொண்டனர் என்று விசாரணையில் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.!