Sigma: “நான் முதலில் தியேட்டரில் பார்த்த படம்.!”- ஜேசன் சஞ்சய் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்| jason sanjay shares first movie he watched in a theatre

Spread the love

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கியிருக்கும் “சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஜேசன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் திரைப்படம் என்பதால் இதன் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நேற்று (செப்.9) சேலத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஜேசன் சஞ்சய்யிடம் நீங்கள் திரையரங்கிற்குச் சென்று பார்த்த முதல் படம் எது என்று கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதில் அளித்த ஜேசன் சஞ்சய், “‘திருமலை’ படத்தைத்தான் பார்த்தேன். அப்போது எனக்கு 3 வயது இருக்கும்” என்று பதிலளித்திருக்கிறார். விஜய் படம் என்பதால் அவர் அளித்த பதிலைக் கேட்டு மாணவர்கள் அரங்கம் அதிர கத்தியிருக்கின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *