Single Parent: அவங்க குழந்தைகளின் கல்விச் செலவை எப்படி பிளான் செய்ய வேண்டும்? | பணம் வளர்ப்போம்

Spread the love

இன்று ஒவ்வொரு பெற்றோர்களும் ஓடியாடி உழைப்பது – அவர்களது குழந்தையின் எதிர்காலத்திற்காக தான்.

அந்த எதிர்காலத்தை சிங்கிள் பேரன்டுகள் எப்படி சிறப்பாக கட்டமைக்கலாம் என்பதை கூறுகிறார் குடும்ப நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.

“கல்வி ஒன்று கொடுத்துவிட்டால் போதும். அது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பார்த்துக்கொள்ளும். இது தான் பெற்றோர்களின் எண்ணம். அது உண்மையும் கூட.

குழந்தைகளின் கல்விச் செலவு என்பது கல்லூரியில் தான் எகிறும். அதை முன்னரே பக்காவாக திட்டமிட்டு சேமிக்க தொடங்கிவிட வேண்டும்.

அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால், கடைசியில், ஒன்றுமே செய்ய முடியாமல் போய்விடும்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

அதனால், இப்போது இருக்கும் சராசரி கல்விச் செலவை உங்கள் குழந்தையின் வயதோடு ஒப்பிட்டு கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.

அந்தத் தொகையை மகளுக்கு செல்வ மகள் திட்டத்திலும், மகனுக்கு பி.பி.எஃப் திட்டத்திலும் முதலீடு செய்யலாம்.

சிங்கிள் பேரன்டுகள் பிள்ளையை வெளிநாட்டில் படிக்க வைக்க ஆசைப்படும் போது நன்கு யோசிக்க வேண்டும். மாதம் ரூ.2 லட்சம் வரையில் சேமிக்கக் கூடியவராக இருந்தால், பிள்ளையை வெளிநாட்டில் படிக்க சேர்க்கலாம். இல்லையென்றால், சற்று யோசிக்க வேண்டும்.

சிங்கிள் பேரன்டுகள் பெரும்பாலும் கல்விக் கடன் பக்கமும் செல்லாமல் இருப்பது நல்லது.

கல்விச் செலவைத் தாண்டி, மற்ற முதலீடுகளுக்கு, தேவைகளுக்கு சிங்கிள் பேரன்டுகள் தங்கம், ரியல் எஸ்டேட், என்.பி.எஸ், ஆர்.டி, மியூச்சுவல் ஃபன்ட் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

இவர்களது முதலீடுகள் Diversified ஆக இருப்பது மிக மிக நல்லது”.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *