பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் பல லட்சம் புதிய முதலீட்டாளர்கள் புதிதாக எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்கிக் கொண்டு இருப்பதும், ஏற்கெனவே முதலீடு செய்துவரும் முதலீட்டாளர்கள் தங்கள் எஸ்.ஐ.பி கணக்கை நிறுத்துவதும் வழக்கமான விஷயம்தான். ஆனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் புதிதாக எஸ்.ஐ.பி கணக்குகளைத் தொடங்குவதைவிட எஸ்.ஐ.பி கணக்குகளை நிறுத்துவது அதிகமாகி இருக்கிறது.

இதை ‘எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ’ என்பார்கள். கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 50.68 லட்சம் புதிய எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அதே மாதத்தில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட 59.12 லட்சம் எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகள் நிறுத்தப்பட்டன. இந்த இரண்டுக்குமான வித்தியாசம்தான் இந்த ‘எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ’. இந்த வித்தியாசம் விகிதாசாரக் கணக்கின்படி பார்த்தால், 116% ஆகும். இந்த ‘எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ’வானது இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி மாதந்தோறுமான ‘எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ’ விவரம் இதோ…
ஏப்ரல் – 101%
மே – 95.46%
ஜூன் – 91.23%
ஜூலை – 81.87%
ஆகஸ்ட் – 81.5%
செப்டம்பர் – 78.53%
அக்டோபர் – 105.7%
பொதுவாக, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட காலம் தொடர வேண்டிய முதலீடாகும். இந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கேற்ப முதலீட்டுத் தொகையானது ஏற்ற, இறக்கத்துக்கு உள்ளாகும். இந்த ஏற்ற, இறக்கத்துக்கு உள்ளாகும்
காலத்தில் குறிப்பாக, பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீடு நஷ்டத்தில் இருக்கும்போது, எஸ்.ஐ.பி முதலீட்டாளர்கள் பதற்றம் அடையக் கூடாது. காரணம், எஸ்.ஐ.பி முதலீடு என்பது 10 ஆண்டுகள் தொடர வேண்டிய முதலீடு என்பதால், குறுகிய காலத்தில் ஏற்படும் நஷ்டத்தைப் பார்த்து முதலீட்டாளர்கள் பயப்படத் தேவை இல்லை.

ஆனால், வங்கி எஃப்.டி-க்கு மட்டுமே பழக்கப்பட்ட நம்முடைய முதலீட்டாளர்கள், எஸ்.ஐ.பி முதலீட்டு 5% – 10% இறங்கி இருப்பதைப் பார்த்துப் பதற்றப்படுகின்றனர். சந்தை இறங்கிக்கொண்டே போனால், நம் முதலீடு அனைத்தும் காணாமலே போய்விடும் என்று நினைக்கின்றனர். இதனால் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிடுகின்றனர். மொத்தமாக முதலீடு செய்திருந்தால், அந்தத் தொகையையும் திரும்ப எடுத்துவிடுகின்றனர்.

ஆனால், இந்த இரண்டு முடிவுகளுமே தவறாவை என்பது பல முதலீட்டாளர்களுக்குத் தெரிவதில்லை. காரணம், கடந்த ஏழு மாதங்களாக இறக்கத்தில் இருந்த பங்குச் சந்தை கடந்த ஒரு மாத காலத்தில் மேலே வந்திருக்கிறது. இதனால் நஷ்டத்தில் இருந்த பல எஸ்.ஐ.பி முதலீட்டாளர்கள் தற்போது லாபத்தில் இருக்கிறார்கள். நஷ்டத்தில் இருக்கிறோமே என்று நினைத்து, முதலீட்டை நிறுத்திய முதலீட்டாளர்கள் மேற்கொண்டு லாபம் பார்க்க முடியாத நிலையை அடைந்திருப்பார்கள்.
கடந்த அக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையின் இறக்கத்தைப் பார்த்து பயந்ததால்தான், தங்கள் எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்கை இந்த அளவுக்கு அதிகமாக நிறுத்தி இருக்கிறார்கள். ஆனால், இப்போது பங்குச் சந்தை மீண்டும் ஏற்றத்தில் போக்கில் வந்திருப்பதால், அவர்கள் மீண்டும் எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. எனவே, கடந்த ஏபரல் மாதத்தில் உச்சத்தில் இருந்த ‘எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ’ அடுத்தடுத்த மாதங்களில் குறைந்தது போல, இனி வரும் காலத்திலும் மெல்ல மெல்லக் குறைய வாய்ப்பு இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!
ஏ.ஆர்.குமார் – 89259 44568
சபரிநாதன் – 89259 44569
தங்கலட்சுமி – 95007 77894
வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்…
வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri-vikatan-com
இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com
Labham Youtube Channel: www.youtube.com/@labham_money
Labham Website: https://labham.money/tamil
முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!
Vikatan Wealth Pvt Ltd – ARN – 310095