கர்நாடகாவில் தற்போது சிறப்புத் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை நடந்து வருகிறது.
இந்த நடவடிக்கையில் பெங்களூரு தொகுதியில் தனது வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
வீடியோவில் பேசியிருக்கும் அவர், “அன்பான நண்பர்களே, உங்களிடம் ஒரு ஜோக் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

SIR (சிறப்புத் தீவிர திருத்தம்) நடவடிக்கைக்குப் பிறகு பெங்களூரு தொகுதியில் வாக்களிக்கும் உரிமை நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில் நானும் ஒருவன். நல்ல ஜோக், இது..
நான் இந்தத் தொகுதியில்தான் பிறந்தேன். இந்தத் தொகுதியில்தான் வாழ்ந்தேன். எனது பள்ளிப்படிப்பு, கல்லூரி, நாடகம் எல்லாமே இங்குதான். உங்கள் தகவலுக்காகச் சொல்கிறேன், நான் இந்தத் தொகுதியின் எம்பி வேட்பாளராகவும் போட்டியிட்டிருக்கிறேன்.