எனது பெற்றோர் இங்கு வந்திருக்கிறார்கள். அது ஒரு நெகிழ்ச்சியான தருணம். எனது சகோதரிக்குத் தொற்று (infection) ஏற்பட்டதால் அவர் இன்று வரவில்லை, அவருக்கு இந்த விருதைச் சமர்பிக்கிறேன்.
உண்மையைச் சொல்லப்போனால், நான் 12 வயதிற்குட்பட்டோர் (U12) போட்டிகளில் விளையாடிய காலத்திலிருந்தே என் தந்தை டிவி திரைக்குப் பக்கத்தில்தான் உட்கார்ந்திருப்பார்.
இந்தப் போட்டியின்போதும் அப்படித்தான் நான் விளையாடுவதைப் பார்த்துகொண்டிருந்தார்.

நான் நான்-ஸ்ட்ரைக்கர் முனையில் இருக்கும்போது, எப்படி விளையாட வேண்டும் என்று அவர் சைகை காட்டுவார். அது இப்போதும் தொடர்கிறது. அடுத்த முறை ஒரு கேமராவை அவர் பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷன்களைப் பாருங்கள், அது வேடிக்கையாக இருக்கும்.
நான் அவரைப் பார்ப்பதும், அவர் எனக்கு அறிவுரைகள் வழங்குவதும் எனக்கு உதவியாக இருக்கிறது. பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு முன்னால் சிறப்பாக விளையாடுவது எப்போதும் ஸ்பெஷல்தான்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.