star trek, X-Men புகழ் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்! | Patrick Stewart, the actor famous for Star Trek and X-Men, has passed away!

Spread the love

1987-ம் ஆண்டு வெளியான Star Trek: The Next Generation தொலைக்காட்சித் தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிகார்டாக (Jean-Luc Picard) நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் (Patrick Stewart).

தொடர்ந்து பல ஆண்டுகள் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிவியல் புனைக்கதை உலகில் தனக்கென இடத்தைப் பிடித்தார். அதேபோல், 2000-ம் ஆண்டு வெளியான X-Men திரைப்படத்தில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் (Professor Charles Xavier) கதாபாத்திரத்தில் நடித்து புதிய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்தார்.

இந்த இரண்டு கதாபாத்திரங்களும் அவரது திரைப்பயணத்தின் அடையாளங்களாக மாறின.

நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்

நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்

1940-ம் ஆண்டு இங்கிலாந்தின் யார்க்சயரில் பிறந்த பேட்ரிக் ஸ்டீவர்ட், சிறுவயதிலேயே நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டார். 1960-களில் ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்தில் இணைந்து பல நாடகங்களில் நடித்தார். ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அவர் வெளிப்படுத்திய நடிப்புத் திறன் பெரும் பாராட்டைப் பெற்றது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *