“Start Camera Action” என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள்” – எடப்பாடி பழனிசாமி | “Abandon the notion that everything will change the moment someone says, ‘Start camera, action!'” – Edappadi

Spread the love

மாநில அரசின் காவல்துறையோ, போதைப்பொருள் தடுப்புப் பிரிவோ இதை பறிமுதல் செய்திருந்தால் கூட, “ஆஹா… இந்த அரசு சொன்ன மாதிரியே Action-இல் இறங்கிவிட்டதே” என்று பாராட்டி இருக்கலாம். ஆனால், இந்த போதைப்பொருளைப் பிடித்தது மத்திய அரசின் DRI அமைப்பு! ஆளுகின்ற மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாத லட்சணத்தில் தான் இன்றைய மாநில அரசும், காவல்துறையும், அதற்கு பொறுப்பான முதல்வரும் இருக்கிறார்கள். போதைப்பொருள் தடுப்புப் படைக்கென பட்ஜெட்டில் ஒதுக்கிய ரூ. 264 கோடியை வைத்து என்ன செய்தீர்கள் முதல்வர் விஜய்?

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் 70 கிலோ ஹெராயின் என்பதெல்லாம் இதுவரை நாம் கேள்விப்படாத அளவிலான வெட்கக்கேடான செய்தி. டி-ஷர்ட் ஒன்றைப் போட்டுக்கொண்டு காமராஜர் சாலையில் நீங்கள் Jogging போனதும் போதைப் பொருள் ஒழிந்துவிட்டது என்று நினைத்துவிட்டீர்களா? எல்லாவற்றையும் சினிமா கண்ணோட்டத்தில் பார்த்து, “Start Camera Action” என்றதும் எல்லாம் மாறிவிடும் என்ற எண்ணத்தை கைவிட்டு, Serious-ஆன இந்த போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *