இச்சம்பவம் நேற்று இரவு 1.30 மணிக்கு நடைபெற்றிருக்கிறது. இச்சம்பவம் தீவிரவாத தாக்குதலால் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இது எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்து என்றே காவலர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
கொண்டாட்டத்தின்போது பயன்படுத்திய வாணவெடிகள் இந்த விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மீட்புப் பணிகளில் தீயணைப்பு துறையினர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த இடம் முழுவதுமாக மூடிபட்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, கிரான்ஸ் மோன்டோனா நகரம் முழுவதும் விமானங்கள் எதுவும் பறக்கக் கூடாத “நோ – ஃப்ளை’ அமல்படுத்தப்பட்டு உள்ளது.