Thailand Princess Bajrakitiyabha dies at 47 after three years in coma / 3 ஆண்டுகள் கோமா… 47 வயதில் காலமானார் தாய்லாந்து பட்டத்து இளவரசி பஜ்ரகிதியாபா!

Spread the love

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் மூத்த மகளான இளவரசி பஜ்ரகிதியாபா, வெறும் அரச குடும்பத்து வாரிசாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த வழக்கறிஞராகவும், ராஜதந்திரியாகவும் சர்வதேச அளவில் முத்திரை பதித்தவர் ஆவார்.

மக்கள் அஞ்சலி

மக்கள் அஞ்சலி

அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற அவர், தாய்லாந்திற்கான ஆஸ்திரிய தூதராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளிலும் மிக முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, சிறைகளில் உள்ள பெண் கைதிகளின் உரிமைகள் மற்றும் அவர்களின் நலன்களுக்காக அவர் மேற்கொண்ட சர்வதேச அளவிலான சீர்திருத்தங்கள் உலக நாடுகளின் பாராட்டுகளைப் பெற்றன.

அந்நாட்டு அரசு, அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட உத்தரவிட்டுள்ளது. தாய்லாந்தின் அடுத்த அரச வாரிசாக முடிசூட்டப்படுவார் என்று மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு திறமையான இளவரசியின் மரணம், ஒட்டுமொத்த தாய்லாந்து மக்களையும் ஆழமான சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *